அகத்திய மலைப்பயணம் - இரண்டாம் நாள் - மலையேற்றம் - பகுதி 2
#கானகனின்_கான் #மேற்கு_தொடர்ச்சி_மலை #அகத்தியர்மலை #அதிருமலை #அகத்தியர்கூடம் அடர்ந்த கானகம் - வானில் பறந்த அருவி - காட்டு ஓடைகள் - சவாலான மலையேற்றம் - நீண்ட புல்வெளிக்காடு - - மழைக்காடு - அகத்தியர்கூடம் தங்கும் முகாம் அருவியில் குளித்து முடித்து உணவு அருந்தியது உடலுக்கு தெம்பைக் கொடுக்க, அடுத்தடுத்த மலைகளை நாங்கள் விரைவாக கடந்தோம். ஆனாலும் தொடர்ந்து வந்த ஏற்ற, இறக்கங்கள் மீண்டும் மூச்சிரைக்க செய்தன. நாங்கள் அருவியில் உணவு சாப்பிடும் போதே மணி மதியம் 2-ஐ கடந்திருந்தது. உடன் வந்த வழிகாட்டிகள் சீக்கரம் கிளம்புங்க நாம இருட்டுவதற்குள் முகாமுக்கு போக வேண்டும் என சொல்லிக் கொண்டே இருந்தனர். குறிப்பாக எங்களின் மலையேற்றக் குழுவில் ஆண், பெண் என பலரும் முதல் முறையாக மலையேற்றத்திற்கு வந்திருந்திருந்தனர். ஆனாலும் அவர்களில் பலர் பொறுமையாகவும், உற்சாகமாகவும் மலையேறிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறை காட்டு ஓடைகளின் சத்தம் கேட்கும் போதும், மலைப்பாதை கீழிறங்கி மீண்டும் மேடேறிச் ஏறிச்சென்றது. ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து சிறிதும், பெரிதுமான ஏராளமான ஓடைகளை கடக்க வேண்டியிருந்தது. சிற