Posts

Showing posts from March, 2020

பருவநிலை மாற்றமும் - பனையின் தேவையும்

Image
      நான் பள்ளியில் படிக்கையில் மழை குறித்து எங்கள் ஆசிரியர் கூறும் போது எனக்கு அறிமுகமான வார்த்தை தான் பருவமழை, நான் கல்லூரிக்கு செல்கையில் அந்த வார்த்தை பருவமழையில் இருந்து பருவம் பொய்த்த மழை என்றானது, அதுவே கல்லூரி முடித்து வேலைக்கு செல்கையில் அது பருவநிலை மாற்றம் என்றானது, இன்றோ அது அதிதீவிர பருவநிலை மாற்றமாக உருவெடுத்து நிற்கிறது.    மேற்கூறிய சொற்களை வெறும் வார்த்தை பரிமாற்றமாக நாம் பார்க்க முடியாது,  கடந்த 4 கோடி ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்த இந்த பூமியின் இயற்கை வளங்களை, மனித இனமானது 400 ஆண்டுகளில் அதனை பாதியாக குறைத்தது தான் அதன் பெரும் சாதனை, வரலாற்று பிழைகளில் இருந்து மனித இனம் பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறது, அது மேலும் மேலும் அழிவு சக்திகளையே ஊக்குவிக்கிறது. அனைத்தையும் பணமாக பார்த்த மனிதனின் கொடுஞ்செயல் இப்பூவுலகின் உயிர் ஆதாரமான மலைகளையும், மழைக்காடுகளையும், ஆற்றையும், கடற்பரப்பையும், இயற்கை சமநிலையையும் கெடுத்தது தான். இன்றளவும் உலகம் முழுமைக்கும் நடக்கும் சூழலியல் பாதுகாப்பு குறித்த கருத்தாக்கங்கள் பூட்டிய அறைக்குள்ளேயே நடந்து வருகிறது, அது களத்திற்கு வரவேண்டும் நாம் இயற