Posts

Showing posts from June, 2021

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 4

Image
சமண கற்படுக்கைகள் ஜவ்வாது மலை தொடர் கிழக்கு தொடர்ச்சி மலைகள்      ஜவ்வாது மலை அடிவாரச் சாரலில் சில மாதங்களுக்கு முன் நண்பர்களோடு செல்கையில் வழியில் சமீபத்தில் இருந்த மஞ்சள் நிற அறிவிப்பு பலகையை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி அதை உற்று கவனித்தேன், அதில் சமண கற்படுக்கைகள் என்று எழுதி இருந்ததை குறித்துக்கொண்டு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் போது அங்கு சென்று பார்க்கலாம் என நினைத்துக் கொண்டேன்.      நீண்ட நாட்களுக்கு பிறகு அமைதியான வார இறுதியின் காலை நேரத்தில் வாகனத்தை எடுத்துக் கொண்டு நாம் அன்று சென்ற அதே ஜவ்வாது மலை அடிவார பாதையில் பயணிக்கும் போது அன்று குறிப்பெடுத்த சமண கற்படுக்கைகள் நினைவுக்கு வர வாகனத்தை திருப்பி கொண்டு அந்த இடத்தை நோக்கி செல்லும் போதே மேகங்கள் இருண்டு சிறு மழை துளிகளை கொட்டிக் கொண்டு இருந்தது இடையே வீசிய சாரல் காற்று பயணத்தில் இதமான இன்பத்தைக் கொடுத்தது.      பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் உள்ள சமண சின்னம் பற்றிய அறிவிப்பு பலகையை பற்றி ஊர் மக்களிடம் கேட்டால் அவர்களுக்கு சரியான விவரம் தெரிவதில்லை, இங்கும் அதே நிலை தான். ஆனாலும் உள்ளூர் வழக்கு மொழி