Posts

Showing posts from July, 2023

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்

Image
மல்லசத்திரம் கற்திட்டைகள்      சில ஆண்டுக்கு முன் ஜவ்வாதுமலையில் உள்ள பெருங்கற்கால கற்படுகைகளுக்கு சென்ற பயணப்பதிவை பார்த்த நண்பர் ஒருவர் கிருஷ்ணகிரி அருகே மல்லசத்திரம் என்ற ஊரிலுள்ள மலையிலும் இது போன்றே நிறைய பெருங்கற்காலச் சின்னங்கள் இருப்பதாக சொல்லியிருந்தார்.      அப்போதே அங்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் மூன்றாண்டுகளுக்கு பிறகு தான் அவ்விடத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.      ஓசூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையின் இடது புறமாக மல்லசத்திரம் என்ற பெயர் பலகை பார்த்தவுடன் நண்பர் சொல்லியிருந்த கற்திட்டைகள் நினைவுக்கு வந்தது. நிச்சயம் இன்று பார்த்துவிட வேண்டும் என அவ்வூருக்கு வாகனத்தை திருப்பினேன்.       அவ்வூருக்கு போகிற வழிநெடுக விவசாயம் செழுமையாக இருந்தது. ஆடி மாதத்தின் வேகமான காற்றை கிராமங்களின் ஊடே பயணிக்கையில் உணர முடிந்தது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மூன்று கி.மீ தொலைவுகளில் மல்லசத்திரம் ஊர் வந்துவிட்டது.      ஊரை நெருங்கும் முன்னமே வலதுபுற குன்றின் மீது ஒரு கற்திட்டை இருப்பதை காண முடிந்தது. நாம் செல்ல வ