Posts

Showing posts from August, 2020

பனையேறி சுந்தரம் - சிறுகதை

Image
          வடாற்காடு மாவட்டத்தில் ஓரளவு நீர் வளம் கொண்ட எங்கள் பகுதியில் கைத்தறி நெசவும், விவசாயமும் தான் பிரதான  தொழில்கள். சிறு வயதில் இருந்தே வீட்டில் அப்பாவுடன் தறி வேலைக்கும், விவசாய வேலைக்கும் செல்வது வழக்கம். வீட்டில் இருந்து சரியாக ஒன்றரை கிலோ மீட்டருக்கும் கொஞ்சம் அதிகமான தூரத்தில் எங்கள் கழனி உள்ளது. அறுவடை நேரங்களில் அப்பா கழனியிலேயேத்  தங்கிவிடுவார், நான் தான் அவருக்கு மாலையில் சாப்பாடு கொண்டு போவேன்.     ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் எங்கள் கழனி இருப்பதால் கிணற்றில் எப்போதும் நீர் இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகப்  பொய்த்துப்போனப் பருவ மழையால் ஏரி வெடிப்புற்றுக் காய்ந்துபோய் இருந்தது. ஆங்காங்கே மழைநீர் சேகரிப்புக்காக 100 நாள் வேலை திட்டம் மூலம் பெண்களால் குறுக்கும், நெடுக்குமாகப்  பள்ளங்கள் வெட்டப்பட்டு இருந்தன. அந்தப் பள்ளங்களுக்கு இடையில் என் மிதிவண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.     எந்நேரம் ஆனாலும் ஏரிக்கரைகளில் இருக்கும் வானுயர்ந்த நெடும் பனைகளைப்  பார்க்காமல் நான் போனது இல்லை. ஐந்து கிலோமீட்டருக்கும் மேல் நீளமுள்ள ஏரியின் இரு கரைகளையும் அந்தப்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 1

Image
      சமணர்கள் வாழ்ந்த தொல் எச்சங்கள் தமிழகம் முழுவதும் நாம் பரவலாக காணலாம், குறிப்பாக எங்கள் மாவட்டத்தில் ஆரணி - திருவண்ணாமலை சாலையில் 15கிமீ தொலைவில் திருமலை என்ற ஊரில் இருக்கும் சமண கற்படுக்கைகள் (நேமிநாதர் ஆலயம்) மிக பழமையானது. இது போன்று எங்க மாவட்டத்தில் வேறு சில ஊர்களிலும் சமண கற்படுக்கைகள் இருக்கின்றன.      ஆனால் பெரிதும் வெளியில் தெரியாத யாரும் எளிதில் அணுகாமல் இருந்த சமணர் கற்படுக்கைகள் எங்கள் ஊரின் அருகில் இருப்பதாக  சமீபத்தில் தோழி பேசும் போது சொல்லி இருந்தாள், ஆனால் அந்த இடம் பற்றிய சரியான குறிப்பு அவளிடம் இல்லை, ஊர் பெயரை மட்டும் தெரிந்தது. அவள் சொன்ன அந்த ஊருக்கு கடந்த வாரம் என் நண்பருடன் போய்ருந்தேன், அவருக்கு ஏற்கனவே இது பற்றி தெரியும் ஆனால் அவருக்கும் அந்த இடத்தின் வழி தெரியாது, அந்த ஊரின் மக்களும் கூட முன்னுக்கு பின் முரணான தகவலே கூறினர். அதனால் கடந்த வாரம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.       இம்முறை எப்படி ஆயினும் அந்த சமண குகை, கற்படுக்கைகளை பார்த்து விட வேண்டும் என்ற வேட்கையில் நானும் என் பயண தோழன் பங்காளி மதன் கிளம்பினோம். கடந்த வாரம்