Posts

Showing posts from February, 2023

சத்தியமங்கலம் கானுலா பகுதி - 6

Image
எனக்கான நாள் - 6 #SathyamangalamForest #KundriMalai      நாங்கள் நேற்று மாதேஸ்வரன் மலைக்கு கிளம்பிய இரவு குஜ்ஜம்பாளையத்தை சேர்ந்த கண்ணப்பன் அண்ணனின் சோளக்காட்டில் யானைகள் இறங்கி அங்கிருந்த சோளப்பயிர்களையும், கம்பு பயிர்களையும் சாப்பிட்டுவிட்டிருந்தன. கண்ணப்பன் அண்ணாவும், ஊர்காரர்களும் இரவு முழுக்க யானைகளை பாங்காட்டிற்குள் விரட்டிக் கொண்டிருந்துள்ளனர்.      மனிதனை விட புத்திசாலியான யானைகளை காட்டுக்குள் விரட்டுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இரவு முழுவதும் யானைகள் மலைக்கு இடது பக்கமும் வலது பக்கமும் மாறி மாறி இறங்கி போக்கு காட்டியிருந்துள்ளன. ஆயினும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நேற்றைய இரவு முடிந்துள்ளது.      காலை உணவு சாப்பிட கோவிலூரில் இருக்கும் உணவகத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அணில் நத்தம் பகுதியை சேர்ந்த சோளக பெண் குழந்தை கடையில் எங்களை பார்த்ததும், அண்ணா நீங்க திரும்ப வந்து பனையோலையில் பொருள் செய்து தரேன்னு சொல்லிட்டு போனீங்க ஆனா வரவேயில்ல என சொல்லி கோவித்துக் கொண்டாள்.      சரி கோவிச்சிகாதடா சீக்கரம் வந்துடுறேன்னு சொல்லி அவங்களை சமாதானப்படுவ

சத்தியமங்கலம் கானுலா பகுதி - 5

Image
எனக்கான நாள் - 5 #SathyamangalamForest  #MaleMadeshwaraTemple      ஒரு புறம் அடர்ந்த காடு மறுபுறம் சீறிப்பாயும் காட்டாறு என எங்களின் பயணம் தொடர்ந்தது.      மாக்கம்பாளையத்தில் இருந்து சில கி.மீ தொலைவில் காட்டாற்றின் ஓரம் பல ஏக்கரில் காட்டை அழித்து பாக்கு, தென்னை, வாழை சாகுபடி செய்து சுற்றிலும் தடினமான சுற்றுச்சுவர் எழுப்பி அதன்மேல் மின்சார வேலியும் போடப்பட்டு இருந்தது.  வழிநெடுக காட்டின் விளிம்பு பகுதியில் இது போன்ற சூழலுக்கு ஒவ்வாத பணப்பயிர் சாகுபடியை காண முடிந்தது.      உணவு தேடி காடுகளிலிருந்து வெளியே வரும் யானைகளுக்கும், இன்ன பிற உயிரனங்களுக்கும் இது போன்ற ஆக்கிரமிப்புகள் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.        அண்ணா போகிற வழியில் ஊக்கியம் தாண்டி தான் நாங்கள் பூசை செய்யும் சிவலிங்கேஸ்வரன் கோவில் இருக்கு அத பார்த்துட்டு போகலாம் என்றான் தம்பி. அவர்களின் குடும்ப வகையறாக்கள் தான் இங்கு தம்புடிகளாக உள்ளனராம். (தம்புடி - பரம்பரையாக பூசை செய்ய உரிமை உள்ள லிங்காயித்துகள். ஆண்டின் சில மாதங்கள் தாம் தம்புடிகளாக இருக்கும் கோவிலிலேயே தங்கி பூசை செய்வார்களாம்).      காட்டாற்றுக்

சத்தியமங்கலம் கானுலா பகுதி - 4

Image
எனக்கான நாள் - 4 #SathyamangalamForest #KundriMalai      குன்றியில் உள்ள குஜ்ஜம்பாளையம் மலை கிராமத்தில் இருக்கும் கண்ணப்பன் அண்ணாவிடம் அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காட்டைப் பற்றி கேட்ட போது அவர் இறுக்கமான மனதோடு சொன்னது… "தம்பி…இந்த மலையும், காடும் எங்களுக்குச் சொந்தமானதுங்கப்பா. இதோ இந்த பாங்காட்டுக்குள்ள தான் எங்க முன்னோரோட ஆன்மா இருக்கு. அவங்க இன்னமும் அங்க தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா எங்கள பாருங்க எங்க எத்தா, எத்தே ( தாத்தா, பாட்டி) இருந்த பாங்காட்டை இழந்து, எங்க சொத்த இழந்து, எங்க சந்தோசத்தை இழந்து இப்ப இங்க வந்து வாழுறோம் என்றார். (பேசும் போதே அவரின் கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தது) அதற்கு மேல் கேட்ட எனக்கும் மனமில்லாமல் அமையாக இருந்துவிட்டேன்.      இங்குள்ள பழங்குடிகளின் முன்னோர்கள் பழையூர் காடு, சில்லூர் பைல் காடு, வாழை மடுவு தோம்பு, கரடிமடுவு காடு என பல பாங்காட்டு பகுதியில் வாழ்ந்துள்ளனர்.       பழங்குடிகள் தாங்கள் பயிர் செய்யக்கூடிய சொந்த நிலத்தைத்தான் காடு என்கிறார்கள். வன அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யும் போதெல்லாம் இவர்கள் காடு என்று கூறியதை வனப்பகுதி

சத்தியமங்கலம் கானுலா பகுதி - 3

Image
எனக்கான நாள் - 3 #SathyamangalamForest #KundriMalai      முனியாண்டி தாத்தாவிடம் பீநாசி எப்போதெல்லாம் வாசிப்பீங்கனு கேட்ட போது. நாங்க ஊர் திருவிழா போது வாசிப்போம், வாலிப வயசுல இருக்கும் போது எங்களுக்கு பிடிச்ச பொண்ணு கிட்ட பேச வாசிப்போம், அந்த பொண்ணு கூட தண்ணி எடுக்க போலாம் வான்னு கூப்பிட வாசிப்போம்னு சொல்லிட்டே அந்த பாட்டையும் பீநாசியில் வாசித்து காட்டினாங்க.      பெரும்பாலும் காடுகளில் வாழும் ஆண் விலங்குகள் தன் இணையை கவர ஏதெனும் ஒரு சிறப்பியல்பை கொண்டிருக்கும், இணை சேர்கையின் போது அதனை வெளிப்படுத்தும். முனியாண்டி தாத்தா பாடிக்கொண்டே வாசிச்ச பீநாசியின் இசையும் கூட அவருக்கான இணையை கவர்வதாவே தான் உணர்ந்தேன்.      அன்று மாலை தம்பி ஈஸ்வர், பண்ணையில் யானை நடமாட்டத்தை கண்காணிக்க கட்டப்பட்டுள்ள உயரமான  அட்டாலிக்கு (பரண்) கூட்டிச்சென்றான். நான் கடம்பூரில் இருந்து குன்றி மலைக்கு வரும் வழியில் பலரின் காட்டில் (நிலத்தில்) அங்கிருக்கும் மரத்தின் உயரத்திற்கேற்ப பரண் அமைக்கப்பட்டிருந்தது.      தம்பியின் நிலத்தில் கூட 50 அடிக்கு மேல் இருக்கும் உயரமான மரத்தின் கிளைகள் மூன்று, 

சத்தியமங்கலம் கானுலா பகுதி - 2

Image
எனக்கான நாள் - 2 #Sathyamangalam #KundriMalai      சில ஆண்டுகளுக்கு முன் சத்தியில் இருக்கும் நண்பரோடு கடம்பூர் அடுத்த இருட்டிப்பாளையத்தில் அவரது விவசாய நிலத்தை பார்க்க சென்றிருந்தோம். அங்கிருந்து திரும்ப வருவதற்குள் இரவு ஆகியிருந்தது. அப்போது கடம்பூர் - சத்தி மலைச்சாலையில் ஒற்றை ஆண் யானை சாலையோர புற்களை மேய்ந்து கொண்டு இருந்ததை பார்த்திருந்தோம். ( சொல்லப்போனால் அது தான் முதன் முதலாக காட்டில் நான் பார்த்த யானை) இம்முறையும் அதே மலைப்பாதை, தனியாக பயணம் செய்வதால் யானையை எதிர்கொள்ள நேரிடோமோ என்ற அச்சவுணர்வோடு வண்டியை ஓட்டிக்கொண்டு மலைக்கு மேல் கடம்பூருக்கு வந்து சேர்ந்தேன்.       மலையில் அப்போது தான் மழைத்தூர ஆரம்பித்து இருந்தது. அங்கிருந்த ஒரு கடையில் அம்மழைக்கு இதமாக புதினா தேனீர் குடித்துக்கொண்டே, மேகக்கூட்டங்கள் மலையின் மீது முட்டி மோதுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தேன்.      முன்னர் ஒரு முறை ஜவ்வாது மலையில் மழை நேரத்தில் பயணித்த போது இப்படியானதொரு மழை மேகங்கள் மலையை முட்டி மோதுவதை பார்த்த அனுபவம் உண்டு. இப்போது அதை விடவும் மிக அருகிலேயே மேகக்கூட்டங்களை காண்கிறே

சத்தியமங்கலம் கானுலா பகுதி - 1

Image
எனக்கான நாட்கள் - 1       கடினமான நாட்களோடே 2022 முடிந்துவிட்டது. வேப்பம் பூவில் இருக்கும் சிறு தேன் துளி போல ஆண்டின் இறுதி நாட்கள் எனக்கான நாட்களாகி போனது.      தனியாக (பைக்கில்) நெடும் பயணம் சொல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை 2022 ல் தான் சாத்தியமானது.      டிசம்பர் மாத இறுதி வாரம் முழுக்க அலுவலகத்தில் விடுப்பு கிடைத்ததால், ஒரு வாரத்தில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்ல முடியும் என யோசித்து, பல ஊர்களையும் எழுதி இறுதியில் சத்தியமங்கலம், குன்றி மலைக்காடுகளில் வாழும் சோளகர் பழங்குடி மக்களை சந்தித்து உரையாடி அவர்களோடு விடுமுறை நாட்களை கழிக்கலாம் என முடிவு செய்தே.   ( சோளர் தொட்டி நாவல் படித்ததில் இருந்தே அம்மக்களை நேரில் சென்று பார்த்து, அவர்களிடம் பேசவேண்டும் என்ற தவிப்பு இருந்தது )      சத்தியமங்கலம், கடம்பூர் மலையை அடுத்துள்ள குன்றி மலைப்பகுதியை சேர்ந்த, அன்பு தோழன் Sidhalingan  சித்தலிங்கத்தை அழைத்து என்னுடைய விருப்பத்தை சொன்ன போது அவன் எந்த மறுப்பும் இன்றி, நீ வா மச்சி உனக்காக நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறேன் என மனம் நிறைந்த பாசத்தோடு சொல்லியிருந்தான்.