Posts

Showing posts from December, 2020

ஜவ்வாது மலை கானுலா - 7

Image
ஜவ்வாதுமலைக் காட்டுப் பயணம்       பயணம் செல்வது அதுவும் காடுகளுக்குள் பயணமாவது போன்ற அதீத மன கிளர்ச்சியை வேற எது கொடுத்திடும் என்பதை பற்றி நான் சிந்திப்பது கூட கிடையாது, காடுகள் அழைக்கின்றன நான் உள் செல்கிறேன், அதனோடு உரையாடுகிறேன் இதுவே இந்த பிணைப்பு போதுமானதாக இருக்கிறது.      ஜவ்வாது மலையில் பார்த்திடாத, அறிந்திடாத மர்மங்கள் இன்னும் எவ்வளவு இருக்கோ என்ற கேள்வி தான் இந்த பயணத்திலும் என்னுள் கேட்டது.       ஞாயிறு அன்று பனிமூட்டதினோடு பயணித்து காலை 7க்குள் பங்காளி மதன் உடன் பனையேறி ராஜிவ் காந்தி அண்ணா ஊருக்கு சென்று அவரை சந்தித்தோம், அப்போது இந்த பருவத்தில் தான் இறக்கிய முதல் பனம்பாலை எடுத்து கொடுத்தார், அதை பருகிய பின் பனையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து நெடுநேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பி, சென்ற வாரமே போக வேண்டும் என திட்டமிட்டு இருந்த ஜவ்வாது மலையின் கிழக்கு எல்லைப்புற மலை கிராமமான கனமழை ஊராட்சி நோக்கி பயணமானோம்.      சென்ற வாரம் போகும் போது அந்த மலையின் அடிவாரம் வரை தான் செல்ல முடிந்தது, அப்போது புயல் காரணமாக பெய்த கடுமையான மழையால் மலைப்பாதை முழ

ஜவ்வாதுமலை கானுலா - 6

Image
ஜவ்வாது மலைக்காட்டு பயணம்      தூவான பொழுதில் ஜவ்வாது மலையின் மடியில் தவழந்த அற்புத தருணம்.      புயல் மழையால் கடந்த இரு வாரமாக ஜவ்வாது மலைக்கு செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்த நேரத்தில், எங்களுக்காகவே வானம் மேகங்கக் கூட்டங்களை சற்று களைத்து விட்டது போலும். மழை எந்நேரமும் வந்துவிடும் என்பதால் அருகில் உள்ள காட்டுக்கு போவோம், தூரமாக செல்ல வேண்டாம் என பங்காளி மதன் சொன்னான் அதனால் ஆரணியில் இருந்து 15கி.மீ மேற்கில் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் இருக்கும் படைவீடு பகுதிக்கு  செல்வதாக முடிவு செய்தோம்.      இந்த புயலில் கிடைத்த பெருமழையால் காட்டாற்று வெள்ளமும் அதனால் ஏரிகள், குளங்கள் ஒவ்வொரு ஊரும் நீரால் நிரம்பி வழிந்தது, முதலில் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் பகுதியில் உள்ள ஏரியின் உபரி நீர் பல மதகுகளை கடந்து வெளியே ஓடிவருவது பார்க்க ரம்மியமாக இருப்பதால் அந்த பகுதியே சிறிய சுற்றுலா தலம் போல் மாறியிருந்ததை செய்திகளில் பார்த்து பின் முதலில் அங்கு சென்று பிறகு அங்கிருந்து படைவீடு செல்வோம் என முடிவு செய்தோம், ஏரி நீரில் ஆட்டம் போட்டு விட்டு கிளம்பும் போது அமிர்தி காட்டுபகுதி அருகில் தா