Posts

Showing posts from April, 2020

கூவம் அடையாறு பக்கிங்காம்

Image
       சென்னையின் இன்றைய வரலாறு என்பது அதன் சிறப்புமிக்க நதிகரைகளின் மீது தான் கட்டமைக்கப்பட்டுள்ளது, பரபரப்பான இந்நகருக்கு குறுக்கும், நெடுக்குமாக செல்லும் நீர் வழித்தடங்களை பற்றி கள ஆய்வுகளுடன் எழுதப்பட்டுள்ள அற்புதமான நூல், சமகாலத்தில் நாம் தொலைத்த ( அழித்த ) நீர் ஆதாரங்களின் விளைவு இன்று சென்னை போன்ற பெரு நகரங்கள் பல்வேறு நீரியல் சிக்கலுக்குள் முழ்கி போய்யுள்ளன, சென்னையின் உண்மையான நீர் ஆதாரங்களை தெரிந்து கொள்வது குறைந்தபட்சம் அடுத்து வரும் தலைமுறை இந்நகரில் வாழ்வதை உறுதி செய்யலாம், அதற்கு நாம் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.           சென்னையை போன்ற நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நகரம் உலகில் எங்கும் காண முடியாது, நீங்கள் லண்டன் சென்றால் அங்கு தேம்ஸ் நதி மட்டும் இருக்கும் வாஷிங்டன் போனால் போட்டோமேக் நதி தான் இருக்கும், எந்த நகரை எடுத்து கொண்டாலும் அங்கு ஒரு நதி அதிகபட்சம் இரண்டு நதி தான் உள்ளன, ஆனால் சென்னையில் மட்டும் தான் மூன்று ஆறுகள் ஓடுகின்றன, இவை மூன்றையும் இணைக்கிறது மிக நீண்ட பக்கிங்காம் கால்வாய், இது தவிர சென்னையில் மட்டும் 15 பெரிய கால்வாய் அதுவும் போக

அதிகாலை (கள்)

Image
       அன்றைய இரவு நேர பணியும் மற்ற நாட்களை போலவே கடந்து கொண்டிருந்தது, இரவு உணவு முடித்து வேலையை தொடங்கும் முன் நண்பனிடம் இருந்து குருஞ்செய்தி, ஊருக்கு வந்துட்டியா என்று. உலகம் முழுமைக்கும் பாதிப்பையும் பயத்தையும் ஒரு சேர கொண்டு வந்து சேர்த்த கொரோனா தொற்று நோயின் காரணத்தால் எங்கள் அலுவலத்தில் அனைவரும் வீட்டில் இருந்த படியே வேலை செய்ய பணிக்கப்பட்டோம்.         நானும் நீண்ட மாதங்களுக்கு பின் ஊருக்கு போக ஆயத்தமானேன், வெளியூருக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் நோய் தொற்று பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட நான் என் வடலியில் (என் இரு சக்கர வாகனம்) என்னுடைய கிராமத்திற்கு பயணப்பட்டேன். அச்சம் கொள்ள வைக்கும் ஆள் அரவமற்ற காய்ந்த சருகுகளை கொண்ட காட்டு பாதை போல காட்சி அளித்தது அந்த தேசிய நெடுஞ்சாலை, மிக பொருமையாகவும் மிரட்சியுடனும் அனைத்தையும் பார்த்துக் கொண்டு சாலையின் மீது ஏறி ஓடி கொண்டிருந்தாள் வடலி.  ஜன்னல் ஓர இருக்கை தான் வேண்டும் என அடம்பிடித்து அண்ணனிடம் சண்டையிட்டு சிறுவயதில் இதே நெடுஞ்சாலையில் பேருந்தில் நான் பார்த்த காட்சிகள் இன்றும் கண் முன் நினைவோடியது. கால சக்கரம் எவ்வளவு வே