Posts

Showing posts from September, 2020

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

Image
      எங்க ஊர் ஆரணியில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் 4km தொலைவில் பூண்டி எனும் சிறிய கிராமத்தில் சமண கோவில் இருப்பதை ஏற்கனவே நாம் கூறியிருந்த #சமணமும்_தமிழும் என்ற புத்தகத்தின் மூலமும் சில நண்பர்கள் மூலமும் தெரிந்துகொண்டோம். சமண தேடலில் கடந்த பயணங்களின் தொடர்ச்சியாக இந்த வாரம் அவ்விடத்தை பார்க்க செல்வோம் என பங்காளி மதன் கூறியிருந்தேன்.           காலையில் மிக தாமதமாகவே கிளம்ப முடிந்தது, கடுமையான வெயில் ஆனாலும் அங்கு சென்று பார்த்துவிட வேணும் என்ற எண்ணம் திடமாக இருந்தது, ஊரில் இருந்து 15நிமிட பயண தூரத்தில் தான் அவ்விடம் இருக்கிறது ஆனால் இதுநாள் வரை அங்கு சென்று பார்த்தது இல்லை.       சோழ கட்டிடகலையின் நுட்பதோடு அழகாக இருந்தது பொன்னெழில் நாதர், பாசுவநாதர் கோவில். கோவிலுக்குள் மிக நேர்த்தியாக பாசுவநாதர், ஆதிநாதர் (ரிஷபதேவர்), நவதேவதா, சந்திரபிரபு, தர்மதேவி சிலைகள் மேலும் ஒரே கல்லில் அமைய பெற்ற 24தீர்த்தங்கர்களின் உருவங்கள் என அனைத்தும் நேர்த்தியாக இருந்தது.           பொன்னெழில் நாதர் என்று கருவறையில் உள்ள ஆதிநாதர் அழைக்கப்படுகிறார். மகாவீரர் முக்குடையின் கீழ் அ

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 2

Image
            சமீபத்தில் மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய #சமணமும்_தமிழும் புத்தகத்தை படித்திருந்தேன், அதில் வடாற்காடு பகுதியில் இருந்த சமணர்கள் பற்றியும் அவர்கள் வாழ்ந்த இடங்களை பற்றியும் சொல்லியிருந்தார்.         குறிப்பாக எங்கள் ஊர் ஆரணிக்கு அருகில் பல சமண கோவில்களும், கல்வெட்டுகளும், குகைகளும் இருப்பது தெரிந்தது. நம்ம ஊர் பக்கத்திலேயே இவ்வளவு வரலாற்று தொன்மையான இடங்கள் இருப்பதை படித்த பின் இயல்பாக அவற்றை பார்க்க வேண்டும் என்ற ஆர்வும் தோற்றிக் கொண்டது. பங்காளி மதன் சில வாரங்களாக இதை பற்றியே கேட்டுட்டு இருந்தான் கடைசியில் கிளம்பியாச்சி.        ஆரணியில் இருந்து கண்ணமங்கலம் வழியாக ஆற்காடு செல்லும் சாலையில் 20கி.மீ தொலைவில் உள்ளது பஞ்சபாண்டவ மலை என்னும் திருப்பான் மலை சமண குகை கோவில்.       ஆற்காடு சாலையின் அருகிலேயே ஒரு பெரிய பாறை அதன் அடியில் சமண குகைகள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.  சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடையில் சர்பத் வாங்கி குடித்துக் கொண்டே கடைக்காரிடம் மலையை பற்றிய சில தகவல்களை கேட்டறிந்தோம். உள் நுழைந்தது நீர் நிரம்பிய தாமரை அல்லி