Posts

Showing posts from October, 2023

கொழுக்குமலை - மூணார் பயணம் - பகுதி 3

Image
சூரியநெல்லி - கற்திட்டை -  கொளுக்குமலை - ஆனையிறங்கி - போடிமெட்டு - தேனி - திண்டுக்கல்      உயர்ந்த மலையின் சரிவில், சுற்றிலும் நீண்ட பள்ளத்தாக்கு நிறைந்த இடத்தில் தான் இரவு தூங்கியிருக்கிறோம்.      காலையில் கூடாரத்தில் இருத்து எழுந்து வெளியே வந்து பார்த்த போது எதிரே தூரத்தில் தொடர்ச்சியான மலை முகடுகளும், ஆங்காங்கே சில மலை கிராமங்களும், அம்மலை கிராமங்களை இடைவிடாது மோதிச்செல்லும் மேகங்களும், இருமலைகளுக்கும் இடையே நீண்ட பள்ளத்தாக்கும் என பார்க்கும் காட்சிகாள் யாவும் பிரம்மிக்க வைத்தது.      ஓரளவு பாதுகாப்பாக மலைச்சரிவில் சற்றே கீழ் இறங்கி பார்த்த போது அருகே இருந்த புல்வெளிகள் மட்டுமே நிரம்பி இருந்த மற்றோரு மலையையும் பார்க்க முடிந்தது. அங்கிருந்து இவ்விடத்தை சுற்றி பார்க்கலாம் என அங்கே கிளம்பினோம்.      தங்குமிடத்தில் காலையில் கொடுத்த சூடான தேனீரை குடித்துவிட்டு விரைவாக அந்த புல்வெளி மலையை நோக்கி நடக்க தொடங்கினோம். 10 நிமிட நடையிலேயே அவ்விடம் வந்து விட்டது.      அம்மலைக்கு செல்லும் வழியில் சாலையோரம் பெரும் பாறைகளை அடுக்கி வைக்கப்பட்ட ஒரு கூடாரமும், அதன் எதிரே இரும்ப

கொழுக்குமலை - மூணார் பயணம் - பகுதி 2

Image
மறையூர் - சந்தனக்காடு - ஆனைமுடி - மூணார் - சூரியநெல்லி      தூவானம் அருவியை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு பயணத்தை தொடர்ந்த போது மழை தூரல் அதிகரித்திருந்தது. காட்டு தாவரங்களில் இருந்து வரும் குளிர்காற்று மெல்ல உடலை ஊடுறுவத் தொடங்கியது.       மாலை 4மணி இருக்கும் நாங்கள் மறையூர் - காந்தலூர் சாலை சந்திப்புக்கு வந்திருந்தோம். காந்தலூரில் இரைச்சல் அருவியும், கற்கால ஈமச்சின்னங்களும், நிறைய  பார்க்க வேண்டிய இடங்களும் இருந்தன. ஆனால், ஏற்கனவே நேரமாகி இருந்ததால் அங்கே செல்ல முடியாமல் பயணத்தை தொடர்ந்தோம்.      மறையூர் அடுத்து வரும் சந்தனக்காட்டு பகுதியும் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் குறிப்பிட்டிருந்தார் பாஸ்கர் அண்ணா.      மறையூரில் இருந்து சில கி.மீ தொலைவுகளில் முழுக்க சந்தன மரங்கள் மட்டுமே நிரம்பிய சந்தன மரக்காடு தொடங்கிவிடுகிறது.      சந்தனமரத்திற்கு ஊடு பயிராக மற்ற மரங்களை வளர்த்தால் தான் நல்ல மகசூல் வரும் எனச்சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்பகுதியில் பல நூறு ஏக்கரில் முழுக்க முழுக்க சந்தன மரங்கள் மட்டுமே  நிறைந்த தோப்பாக இருந்தது. ஆங்காங்கே சந்தன மரக்கன்றுகள்

கொழுக்குமலை - மூணார் பயணம் - பகுதி 1

Image
திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் - பழனி - உடுமலை - ஆனைமலை, சின்னார் வனப்பகுதி      பருவ மழை காலத்தில் ஒரு முறையேனும் கேரளத்தின் சோலைக்காடுகள், புல்வெளிக்காடுகளை பார்த்திட வேண்டும், அக்காடுகளில் பயணித்திட வேண்டும் என்ற நீண்ட நாள் ஏக்கம் இப்பயணத்தில் ஓரளவு நிறைவேறியது.      கடந்த மாத இறுதியில் வந்த தொடர் விடுமுறையில் மூணார் அடுத்த தமிழக, கேரள எல்லையில் தனியார் தேயிலை தோட்டப்பகுதிக்குள் இருக்கும் கொளுக்குமலைக்கு போகலாமா என தம்பிகளிடம் கேட்டிருந்தேன். அவர்களும் உடனே சரி எனச் சொல்ல கொளுக்குமலை செல்வது எனப்பயணம் உறுதியானது.      மூணார் அடுத்த சூரியநெல்லி என்ற மலை கிராமப் பகுதியில் தான் கொளுக்கு மலை இருக்கிறது என்ற தகவல் மட்டுமே எங்களுக்கு தெரியும். அம்மலைக்கு எப்படி செல்வது, எங்கு தங்குவது, யாரை அணுகுவது என்ற எந்த தகவலும் அதுவரை எங்களுக்கு தெரியாது.      கோவை சதாசிவம் ஐயாவோடு முன்னர் ஒருமுறை சின்னார் வனப்பகுதியில் கானுலா சென்றிருந்த நிகழ்வை ஒருங்கிணைத்த அண்ணன் மோகன்ராஜ் நினைவுக்கு வர அவரிடம் தகவலை சொல்லி உதவி கேட்டிருந்தேன்.      அவர், மூணாரில் சூழல் சார்ந்த கானுலாக்களை ஒருங்கிணைக்கு