Posts

Showing posts from January, 2022

பனை தொழிலை அவமானபடுத்தும் தமிழக காவல்துறை

Image
     சில நாட்களுக்கு முன் ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பனையேறிகள் பெரும்பான்மையாக உள்ள கிராமத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் வைக்கப்பட்ட விளம்பர பதாகையில் "கொரோனா" மற்றும் "கள்ளச்சாராயம்" விழிப்புணர்வு கூட்டம் என்று எழுத்தப்பட்டது தான் பெரும் ஏமாற்றத்தை கொடுக்கிறது.      மேற்கூறிய அந்த கிராமம் மட்டுமல்லாது அதை சுற்றியுள்ள கிராமங்கள் முழுக்க பனையேறிகள் வாழக்கூடிய பகுதிகள். அவர்கள் பல தலைமுறைகளாக அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிரதான தொழிலே பனைமரம் ஏறுவதும், பனங்கள் இறக்குவதும் தான். பனங்கள் பருவம் இல்லாத காலங்களில் சிலர் ஈச்சம், தென்னங்கள் இறக்குவர், சிலர் கூலி வேலைகளுக்காக வெளியூர் செல்வர்.       தமிழக அரசு கள்ளுக்கு தடைவிதித்ததால் கடந்த 30ஆண்டுக்கும் மேலாக, பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் அவர்கள் சொல்லன்னா துயரத்தை சந்தித்து வருகின்றனர். நிலைமை இப்படி  இருக்கையில் பனங்கள் இறக்கும் பனையேறிகள் மீது கள்ளச்சாராயம் காய்ச்சியதாகவும்,  எரிசாராயம் வைத்திருந்ததாகவும் பொய