Posts

Showing posts from June, 2022

பனை கனவுத் திருவிழா

Image
பனை கனவுத் திருவிழா      தமிழக வரலாற்றில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் பனை திருவிழாவில் ஒன்றுகூட வாருங்கள்.      உலகில் உள்ள எல்லா வகையான சமூக பண்பாட்டு படிமலர்ச்சியையும் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் வைத்திருக்கும் தமிழகத்தின் சமூக பண்பாட்டு, தொடர்ச்சியின் பேர் ஆவணமாக இருக்கும் பனையை கொண்டாட ஒன்றிணைவோம்.      ஒரு மரம் தன்னுடைய எல்லா உறுப்புகளையும் மானுட பயன்பாட்டிற்கு கொடுக்கிறது என்றால் அது பனை மரமாக தான் இருக்கும். ஒரு பனை மரம் தன் மொத்த வாழ்நாளையும் மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவே அற்பணிக்கிறது.      தமிழ் கழக காலத்திற்கு முன்பில் இருந்தே பனைசார் பொருட்கள் தமிழக மக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்துள்ளதை பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எளிய மக்களின் அன்றாட வாழ்வியலின் அங்கமாக பனைசார் பொருட்கள் இருந்தமையால் ஏறக்குறைய எல்லா தமிழ் கழக நூல்களிலும் பனையின் உணவுகளை அதன் பாகங்களை நேரடியாகவும், உவமையாகவும் அறிஞர் பெருமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.     அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இன்றும் தமிழக நிலமெங்கும் பனைசார் முன்னெடுப்புகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருக

தடா அருவி - காட்டுப்பயணம்

Image
மீண்டும் கானகம்      தமிழகத்தை தாண்டி முதல் முறையாக ஆந்திரா காட்டிற்குள் குடும்பமாக காட்டு பயணம். நான் அதிக சிரம் எடுத்து ஏறிய மலைகளில் கொல்லிமலையின் கோரக்கர் குகைக்கு சென்ற மலை ஏற்றத்தை எப்போதும் நினைவு கொள்வேன். அம்மாதிரியான நினைவின் தொடர்ச்சியில் இணைந்து கொண்டது, தாடா அருவியின் மலைகள். அதிக பட்சம் 650மீட்டரே கொண்ட உயரம் மிகக்குறைவான மலை தான் என்றாலும் மலைப்பாதை சரிவர இல்லாமல் முழுக்க பாதை முழுக்க பாறைகள் இருந்ததாலும், முந்தைய இரவு அலுவலக பணியால் தூங்காமல் அடுத்த நாள் காலை 100கிலோ மீட்டருக்கு மேல் வாகனம் ஓட்டியதாலும் மிகுந்த சோர்வோடு தான் மலையேற்றதை தொடங்கினோம். சில வாரத்திற்கு முன் வாலண்டீனா அக்கா வீட்டில் திருமணத்திற்கான முக்கறி (ஆடு, மாடு, கோழி) விருந்தை முடித்து பின் நீண்ட நாட்களாக திட்டமிட்டுக்கொண்டு இருந்த பருவதமலை பயணத்தை பற்றி பேச தொடங்கி கொலுக்குமலை சென்று இறுதியில் அடுத்த ஒரு வாரத்தில் தடா அருவிக்கு செல்வது என்று உறுதியானது. சென்னையில் இருந்து 95-100 கிலோ மீட்டருக்குள் இருப்பதாலும் ஓர் நாளில் சென்று திரும்பி வர ஏற்ற இடமாகவும்  இருப்பதால், தற்போது தடா