Posts

Showing posts from September, 2023

கொடக்கரை காட்டு பயணம்

Image
பனை - காடு - மலை - மழை - யானை- பயணம் 'இனிது இனிது ஏகாந்தம் இனிது' என்றார் ஒளவை.      நிச்சயம் ஔவையும் காடோடியாக இருந்து தான் இதை சொல்லியிருப்பார். ஏகாந்தத்தின் இன்பத்தை அவர் காட்டில் தான் அனுபவித்திருப்பார்.      சமீபமாக நான் ஓசூர் வரும் ஒவ்வொரு முறையும், வார இறுதி நாட்களில் கிழக்கு மலைகளில் யானைகளின் முக்கிய காடான காவிரியின் (வடக்கு) காடுகளுக்குள் பயணப்படும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.      அப்படியாக கடந்த மாதம் ஓசூர் வந்திருந்த போது வடக்கு காவிரி வன உயிரின சரணாலயத்தின் காட்டு பாதையில் முதல் முறையாக பயணித்து ஒக்கேனக்கல் அருவிக்கு சென்றிருந்த அனுபவத்தை பகிர்ந்திருந்தேன்.      அப்பதிவை பார்த்திருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த அக்கா ஒருவர் பெட்டமுகிலாம் மலைக்கு செல்ல வாய்ப்பிருந்தா அந்த மலைக்கும் போய்ட்டு வாங்க என சொல்லியிருந்தார்.      அவர் சொல்லியத்தில் இருந்தே பெட்டமுகிலாம் மலைப்பகுதியை தேடத் தொடங்கினேன். அப்பகுதியின் வரைபட அமைப்பை பார்த்ததும் அடுத்த பயணம் நிச்சயம் பெட்டமுகிலாம் மலைக்கு சென்று பின் பஞ்சபள்ளி அணைக்கு செல்வது என திட்டமிட்டிருந்தேன்.      பெரும்பாலும் தனித