Posts

Showing posts from July, 2021

ஜவ்வாதுமலை கானுலா - 11 (பகுதி 2)

Image
ஜவ்வாதுமலை கானுலா - இரண்டாம் நாள் "ஆசியாவின் பெரிய (நீர்மத்தி) அடி மரமும் - பெருங்கற்கால ஈமை சின்னங்களும்"        நேற்று இரவு முழுவதும் பெய்த கடும் மழையில் எங்கள் கூடாரம் ஏறக்குறைய தண்ணீரில் மிதந்து கொண்டு தான் இருந்தது. கடுமையான குளிரால் இரவு சில மணி நேரமே தூங்க முடிந்தது. அதிகாலையில் மீண்டும் அருவிக்கு சென்று அங்கிருந்து சூரிய உதயத்தை பார்க்கலாம் என இரவு திட்டமிட்டு இருந்தோம் ஆனால் இரவு பெய்த கடும் மழையாலும், மேகமூட்டத்தாலும் அருவிக்கு செல்வது சாத்தியமில்லை. மேலும் குளிர் நடுக்கத்தில் இருந்து மீளமுடியாமல் எல்லோரும் காலையில் எழுந்து கொள்ளவே 8மணிக்கு மேல் ஆனது, தோழி சாரு மலை கிராமத்தில் யார் வீட்டிலோ இருந்து கொண்டு வந்த கருப்பட்டி காபி அந்த குளிருக்கு இதமான சூட்டை கொடுத்தது.      நேற்று வாகன பழுது பார்த்துக் கொண்டு வந்த நண்பர் சதிஷ் அந்த மலை கிராமத்திற்கு வந்து சேர்ந்த போது ஊர் மக்களிடம் தங்குவதற்கான இடமும்,  மாற்று பாதுகாப்பு ஏற்பாடும் பேசி வைத்திருந்தார். நேற்று அவர் கிராமத்திற்கு வந்து சேர்ந்ததும் எங்களை காண அருவி வழியே இரண்டு மூன்று முறை வந்து பார்த்துள்ளார்,

ஜவ்வாதுமலை கானுலா - 11

Image
ஜவ்வாதுமலை கானுலா - முதல் நாள் "தேனருவியும் - நீண்ட மழை இரவும்"      கொரானா இரண்டாம் அலை ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என கடந்த 6மாத காலமாக காட்டுப்பயணமோ, மலையேற்றமோ இல்லாமல் வெறுமையாக இருந்த போது தான் Karthi KN இருந்து அழைப்பு வந்தது, சகோ இந்த வர இறுதியில் நண்பர்களோடு ஜவ்வாதுமலைக்கு வர திட்டம் இருக்கு நீங்களும் வரீங்களான்னு கேட்டதும் இதற்காக தானே காத்திருக்கோம்ன்னு உடனே சரின்னு சொல்லிட்டே.      ஜவ்வாது மலையில் எங்கு செல்லப்போகிறோம். என்ன என்ன பார்க்கப்போகிறோம். இரவு மலையில் எங்கு தங்க போகிறோம் என்பதெல்லாம் முன்னமே பேசி முடிவு செய்துவிட்டோம்.      சனிக்கிழமை காலை 10மணிக்குள் ஆரணி வந்த பின் அங்கிருந்து எல்லோரும் ஒன்றாக போளூர் வழியாக மலைக்கு செல்ல திட்டம் இருந்தது, வழக்கம் போல் வெள்ளி இரவு பணி முடித்துவிட்டு சனி கிழமை காலையில் மலைக்கு செல்ல தயாராக இருந்த போது கார்த்தி அழைப்பு, சகோ உடன் வந்தவங்க வழி மாறி போய்டாங்க, நீங்க நேரா போளூர் வந்துடுங்க நாங்க எல்லாரும் அங்க வந்து விடுகிறோம் என்றான்,  நானும் போளூர் சென்று காத்திருந்தேன். நீண்ட காத்திருப்புக்கு பின் கார்த்திக் உடன் தங