Posts

Showing posts from March, 2021

ஜவ்வாதுமலை கானுலா - 10

Image
#குள்ளர்குகை #கற்திட்டைகள் #நடுகற்கள் #ஜவ்வாதுமலை #கிழக்குதொடர்ச்சிமலை      நம்முடைய காட்டுபயணங்களை பார்த்து மகிழ்ந்து போன தங்கை சுவேதா சில மாதங்களாகவே, அண்ணா எங்களையும் உங்களோடு காட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு கேட்டுட்டு இருந்தா, பல வாரங்கள் கழித்து தம்பி, தங்கைகளை ஜவ்வாதுமலை காட்டுக்கு அவர்களை அழைத்து செல்ல நேரம் கிடைத்தது.      திட்டமிட்ட படி தம்பி கிஷோரும், தங்கை சுவேதாவும் சனி கிழமை (27.03.21) இரவே நம் வீட்டுக்கு வந்து விட்டனர். அடுத்த நாள் ஞாயிறு காலை விரைவாக மலைக்கு போக முடிவு செய்து சீக்கரம் கிளம்பினோம். கோடை நெருங்கிவிட்டதால் மலைக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் கூடிய வரை விரைவாக மேலே சென்றுவிட எண்ணினேன்.       அவர்கள் இருவரும் முதல் முறையாக ஜவ்வாதுமலைக்கு வருவதால் எந்த இடத்திற்கு அழைத்து செல்வது என்று யோசித்து, பிறகு ஜவ்வாதுமலையில் உள்ள சில தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்லலாம் என முடிவு செய்து கொண்டேன்.  அதன் படி வீட்டில் இருந்து கிளம்பி போளூரில் இருந்து அத்திமூர் காட்டு பாதை வழியாக ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் மலை ஏறினோம். விரைவாக வந்ததால் கா

பனையும் சுட்டியானையும்

Image
#மலை_அழைக்கிறது #ஜவ்வாதுமலை #பனையும் #சுட்டியானையும்        சென்னை புத்தக திருவிழாவில் குழந்தைகளுக்கு நாம் பனை ஓலை பொருட்கள் செய்வதை உடன் இருந்து பார்த்த ஆற்றல் பிரவின் அண்ணா, தம்பி இன்னும் சில வாரங்களில் சுட்டியானை மாத இதழ் மூலமாக  ஜவ்வாதுமலையில் குழந்தைகள் முகாம் நடத்த திட்டமிட்டு இருக்கோம், நீங்கள் குழந்தைகளுக்கு பனை ஓலையில் பொருட்களை செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டு இருந்தார். பனை ஓலையில் பொருட்களை குழந்தைகளுக்கு செய்து மட்டுமே கொடுத்த எனக்கு, பனை ஓலை பொருட்களை செய்ய கற்றக் கொடுக்கும் நிகழ்வு புது அனுபவத்தை கொடுக்கும் ஆகையால் மறுமொழி பேசாது அண்ணாவிடம் சரி என்றேன்.       மார்ச் 20,21 தேதிகளில் நிகழ்வை நடத்துவது என்று முடிவானது, நிகழ்வு நடக்கும் வலசை வாழ்வியல் பள்ளி (பண்ணை) ஜமுனாமரத்தூரில் இருந்து மேற்கே காவலூருக்கு அருகில் மலைரெட்டியூர் எனும் மலை கிராமத்தில் மலை, காடு, மா தோப்புகள் சூழ்ந்த  அரணுக்குள் உள்ள ஒருங்கிணைந்த பண்ணை. அதன் நிறுவனரான ஐயா முருகேசனது அற்பணிப்பு அளப்பரியது, அவ்வூரின் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக அன்பாலயம் அமைத்து அங்கு தினமும் உ

ஜவ்வாதுமலை கானுலா - 9

Image
#நடுகற்கள் #கற்திட்டைகள் #ஜவ்வாதுமலை #கிழக்குதொடர்ச்சிமலை      நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜவ்வாதுமலை காட்டுக்குள்      சில மாதங்களுக்கு முன் ஜவ்வாது மலையில் நாம் சென்று பார்த்த கற்திட்டைகள் எனும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களை பார்க்க சேலத்தில் இருந்து தொல்லியல் ஆர்வலர் ஐயா மோகன் மற்றும் செய்யாரில் இருந்து மருத்துவர் நண்பர் ஒருவரும் வந்திருந்தனர்.      ஐயா மோகன் தமிழகத்தில் உள்ள நடுகற்கள், சமண படுக்கைகள், தொல்லியல் இடங்கள் என தம் தொடர்ச்சியான பயணங்களில் ஆவணப்படுத்தியுள்ளார். ஜவ்வாதுமலையில் உள்ள கற்திட்டைகளை பார்க்கவே அவர் சேலத்தில் இருந்து வந்தார்.      நாங்கள் முதலில் ஜவ்வாதுமலை கற்திட்டைகள் மற்றும் பூசிமலைக்குப்பம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள சமண கற்படுக்கைகளை பார்ப்பதாக திட்டமிட்டோம், நேரம் இருந்தால் போகிற வழியில் சில நடுகற்களை பார்த்துவிடலாம் என நினைத்தோம்.       கடந்த சனி கிழமை (13.03.21) காலை எங்கள் ஊருக்கு இருவரும் வந்து சேர்ந்தனர், முதலில் எங்கள் ஊரில் உள்ள சமண ஆலயத்தை பார்த்த பிறகு, வேலூர் சாலையில் கண்ணமங்கலத்தில் இருந்து அமிர்தி வனப்பகுதி வழியாக ஜவ்வாதும