Posts

Showing posts from 2024

அகத்திய மலைப்பயணம் - இரண்டாம் நாள் - மலையேற்றம் - பகுதி 2

Image
#கானகனின்_கான் #மேற்கு_தொடர்ச்சி_மலை #அகத்தியர்மலை #அதிருமலை #அகத்தியர்கூடம்  அடர்ந்த கானகம் - வானில் பறந்த அருவி - காட்டு ஓடைகள் - சவாலான மலையேற்றம் - நீண்ட புல்வெளிக்காடு - - மழைக்காடு - அகத்தியர்கூடம் தங்கும் முகாம்      அருவியில் குளித்து முடித்து உணவு அருந்தியது உடலுக்கு தெம்பைக் கொடுக்க, அடுத்தடுத்த மலைகளை நாங்கள் விரைவாக கடந்தோம். ஆனாலும் தொடர்ந்து வந்த ஏற்ற, இறக்கங்கள் மீண்டும் மூச்சிரைக்க செய்தன.      நாங்கள் அருவியில் உணவு சாப்பிடும் போதே மணி மதியம் 2-ஐ கடந்திருந்தது. உடன் வந்த வழிகாட்டிகள் சீக்கரம் கிளம்புங்க நாம இருட்டுவதற்குள் முகாமுக்கு போக வேண்டும் என சொல்லிக் கொண்டே இருந்தனர். குறிப்பாக எங்களின் மலையேற்றக் குழுவில் ஆண், பெண் என பலரும் முதல் முறையாக மலையேற்றத்திற்கு வந்திருந்திருந்தனர். ஆனாலும் அவர்களில் பலர் பொறுமையாகவும், உற்சாகமாகவும் மலையேறிக் கொண்டிருந்தனர்.      ஒவ்வொரு முறை காட்டு ஓடைகளின் சத்தம் கேட்கும் போதும், மலைப்பாதை கீழிறங்கி மீண்டும் மேடேறிச் ஏறிச்சென்றது. ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து சிறிதும், பெரிதுமான ஏராளமான ஓடைகளை கடக்க வேண்டியிருந்தது. சிற

அகத்திய மலைப்பயணம் - இரண்டாம் நாள் - மலையேற்றம் - பாகம் 1

Image
#கானகனின்_கான் #மேற்கு_தொடர்ச்சி_மலை #அகத்தியர்மலை #அதிருமலை #அகத்தியர்கூடம் விதுரா - போனக்காடு மலை கிராமம் - கான்துறையின் சோதனைச்சாவடி - மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடு - காட்டு அருவிகள் - மலையேற்றம் - அருவிக்குளியல்      அகத்தியர் கூடம் செல்ல அனுமதி வாங்கியிருந்தாலும் போனக்காடு மலை கிராமத்தில் உள்ள கான்துறையின் சோதனைச்சாவடியில் நம்மையும், நாம் கொண்டுச் செல்லும் பையையும் முழுவதுமாக பரிசோதித்த பின்னரே காட்டிற்குள் அனுமதிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நெகிழிகள் எடுத்து செல்லக்கூடாது என்பதற்காக இந்த கடுமையாக நடைமுறை என நாம் நினைத்தால் அது உண்மையல்ல. (இது பற்றி அடுத்த பதிவில் விரிவாக சொல்கிறேன்)      திருவனந்தபுரத்தில் இருந்து போனக்காடுக்கு செல்லும் நேர் பேருந்து விதுரா வழியாக தான் போகும். விதுராவில் அதிகாலை 5.30க்கு வரும் அந்த பேருந்திற்காக நாங்கள் அனைவரும் முன்னமே வந்து காத்திருந்தோம். ஏனெனில் அந்த பேருந்தை விட்டால் அடுத்த பேருந்திற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்.      எனவே முந்தைய நாள் இரவே மலையேற்றத்திற்கும், அங்குள்ள முகாமில் தங்குவதற்கு

அகத்திய மலைப்பயணம் - முதல் நாள்

Image
#கானகனின்_கான் #மேற்கு_தொடர்ச்சி_மலை #அகத்தியமலை #அதிருமலை #அகத்தியர்கூடம்      சென்னை - திருவனந்தபுரம் - விதுரா - தவயக்கல் அருவி      காடு, மலை என பயணப்பட தொடங்கிய காலம் முதல் என் வாழ்வில் ஒரு முறையேனும் செல்ல வேண்டும் என நினைத்திருந்த மலையேற்றம்.       தமிழக எல்லைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி, தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான உயிர்களை வளமாக்கி, தமிழக கடல் பகுதியிலேயே சென்று சேரும் ஒரே வற்றாத உயிர் ஆறான தாமிரபரணியின் பிறப்பிடமான அகத்திய மலைக்கு சென்ற இப்பயணத்தில் பல்வேறு சவால்களையும், சாகசங்களையும், வலிகளையும் மகிழ்வையும் பெற்றேன். பெருமையாக அனைத்தையும் அசைப்போட முயல்கிறேன்.      அகத்திய மலை போறதுக்கான பயணத்திட்டம் தயாராகிட்டு நீயும் வரையா மச்சி, என தோழி புவனா கேட்டு இருந்தாள். அப்பயணத்திற்காகவே காத்திருந்த எனக்கு அவள் கேட்டதும் எந்த மறுப்பும் இன்றி உடனே சரி என்றேன்.      அகத்திய மலைக்கு தமிழகத்தின் பாபநாசம் மலைப்பகுதி வழியே செல்லும் காட்டுப்பாதையை, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் வந்த பிறகு தமிழக கான்துறையினர் மூடிவிட்டனர். அதன் பிறகு அவ்வழியில