Posts

Showing posts from May, 2023

ஜவ்வாதுமலை கானுலா - 15

Image
     சில மாதங்களுக்கு முன்  ஜவ்வாதுமலை காட்டிற்குள் இருக்கும் ஒரு சிற்றருவியை தேடிச் சென்ற போது உடன் வந்து வழிகாட்டிய சிறுவனின் அப்பாவிடம் காட்டுக்குள் இதே போல் வேறு எங்கவெல்லாம் அருவிகள் இருக்கிறது என கேட்டு இருந்தேன்.      அவர், சில மலை கிராம ஊர்களை சொல்லி அங்கு அடர்ந்த காடுகளுக்குள் உள்ள சில அருவிகளின் இடத்தையும், அங்கு எந்தெந்த ஊர் வழியாக செல்ல வேண்டும் எனவும் அந்த பழங்குடி அண்ணா சொல்லியிருந்தார். அவர் சொல்ல சொல்ல அப்போது அனைத்தையும் குறிப்பெடுத்து வைத்திருந்தேன்.     நீண்ட நாட்களுக்கு பின் ஊருக்கு வந்ததும், அந்த பழங்குடி அண்ணா சொல்லியிருந்த ஜவ்வாதுமலையில் நான் பார்த்திடாத, சென்றிடாத அருவிகள் நினைவுக்கு வர அவ்விடங்களை பட்டியலிட்டு அதில் உஜ்ஜலாறு என்ற சிற்றருவிக்கு செல்வது என முடிவு செய்து கிளம்பினேன்.      சில வாரங்களாக வாட்டியெடுத்த வெயில் அன்று பெரிதாக இல்லாமல் வானம் மேகங்களால் நிரம்பி இருந்தது. கிளம்புவதற்கு சற்று முன்னர் சில நிமிட தூரல்.      வெயிலின் தாக்கம் பெரிதாக இன்றி ஜவ்வாதுமலையின் காட்டுப்பாதையில் வாகனத்தை மெல்ல செலுத்தினேன்.      எப்போதும் செல்லும் மலைப்பாதை