Posts

Showing posts from July, 2020

மறுபிறவி எடுத்த அபூர்வ பனை

Image
      பனை குறித்த தொடர் பயணங்களில் நாம் பல்வேறு வித்தியாசமான பனைகளை பார்த்து கொண்டு வருகிறோம், அதன்படி கடந்த வாரம் கிளைப்பனை பற்றி பதிவு செய்து இருந்தோம். அதை பார்த்த அநேக நண்பர்கள் தமிழ் பெருநிலமெங்கும் உள்ள கிளைப்பனைகளை பற்றி செய்திகளை அனுப்பி இருந்தனர், அதில் எங்கள் ஊர் நண்பர்  Ganesh கடந்த முறை படைவீடு சென்ற போது தான் பார்த்த வித்தியாசமான பனையின் புகைப்படத்தை அனுப்பியிருந்தார்.      இதுவரை அப்படியான பனையை நான் எங்கும் பார்த்தது இல்லை, அவர் புகைப்படம் அனுப்பிய நாளில் இருந்தே அதை நேரில் சென்று பார்க்க வேணும் என்ற ஏக்கம் இருந்தது. அதிலும் அப்பனை இருக்கும் இடம் நாங்கள் முந்திய பயணங்களை மேற்கொண்ட அதே படைவீடு, சவ்வாதுமலை பகுதிக்கு அருகில் தான். எனவே ஞாயிறு காலையில் வேறு ஒரு மலைக்கு செல்வதாக இருந்த பயண திட்டத்தை இந்த அதிசய பனையை காண போவோம் என பங்காளி மதன் கூற.. புறப்பட்டோம்.        காலை 11 மணிக்குள் அந்த அதிசய பனை இருக்கும் தஞ்சாம்பாறை (படைவீடு) மலை அடிவாரத்திற்கு சென்றிருந்தோம், அங்காங்கே சில குடிசை மற்றும் கான்ங்ரிட் வீடுகள் இருந்தது, சாலையின் ஓரம் நெல் வயல் வரப்பின் மீது வல

அதிசய கிளைப்பனை - பனை பயணம்

Image
அதிசய கிளை பனை        ஐயா பண்ருட்டி பஞ்சவர்ணம் எழுதிய  #பனைமரம் புத்தகத்தில் ஏழுகிளைகள் கொண்ட பனையை ஆவணப்படுத்தி இருந்தார், அவரின் முகநூல் பதிலும் அது பற்றி பதிவிட்டு இருந்தாங்க. அதை பார்த்ததில் இருந்து அந்த இடத்திற்கு போக வேண்டும் என்ற ஆசை இருந்தது, மேலும் அந்த இடம் எங்க ஊரில் இருந்து 50km பயண தூரத்தில் தான் இருக்கு, ஆனால் பணிச் சூழலில் பல காலம் அங்கு போக முடியாமல் இருந்தது.        இந்த கொரானா ஊரடங்கு நமக்கு நிறைய உபரி நேரங்களை கொடுத்தது. இந்த ஓய்வு நேரத்தில் வார இறுதி நாட்களில் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சவ்வாது மலை காட்டுக்கும், அங்குள்ள பழங்குடிகளின் கிராமத்திற்கும் கடந்த வாரங்களில் சென்று பார்த்துதோம். அடுத்து நான் #பனைமரம் புத்தகத்தில் பார்த்த அந்த ஏழு கிளை கொண்ட பனையை பார்க்க போகனுன்னு எப்போதும் போல் பங்காளி மதன் கிட்ட வெள்ளி இரவு 10.30மணிக்கு மேல் தான் சொன்னேன், ஆனா அடுத்த நாள் காலையே (11.07.20) கிளம்பிட்டோம்.           காலை 11மணிக்கே அந்த ஊருக்கு போய் சேர்ந்துட்டோம், பிறகு அங்கு ஆட்டோ ஓட்டும் அண்ணன்களிடம் இந்த கிளை பனையின் புகைப்படம் காட்டி எங்க இருக்குன்னு விசாரி

ஜவ்வாது மலை கானுலா - 3

Image
05.07.2020 கோட்டைமலை காடு, படைவீடு மீண்டும் காட்டுக்குள்      சில வாரங்களுக்கு முன், நான் சின்ன வயசுல ஒரு மலை கோவிலுக்கு மேல இருந்து  பார்த்த பள்ளத்தாக்கு கிராமத்துக்கு போனத பத்தி பதிவு போட்டு இருந்தேன், (முந்தைய பதிவை பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம். பதிவு லிங்க் முதல் கமெண்டில் இருக்கு ) அந்த பதிவில் பலர் எங்களையும் அங்க கூட்டிட்டு போங்க நாங்களும் அந்த மலைக்கு மேல இருந்த அந்த காட்டின் அழகையும்,  அந்த பள்ளத்தாக்கு இருக்குற குட்டி மலை கிராமத்தையும் பார்க்கனும்ன்னு கேட்டு இருந்தாங்க.      அந்த அன்பு உள்ளங்களுக்காக மீண்டும் காட்டுக்குள் பயணம். சின்ன வயசுல எங்க இருந்து அந்த பள்ளாத்தாக்கு மலை கிராமத்தை நான் பார்த்தனோ, மீண்டும் அதே இடத்தில் இருந்து இந்த காட்டின் மொத்த அழகையும் ரசிப்போம் வாங்க.        எங்க ஊருல இருந்து ஊச்சி மலை வரைக்கும் 35கிலோ மீட்டர்க்கும் கொஞ்சம் அதிகமா இருக்கும், ஆனா எங்க ஊருல எந்த இடத்துல இருந்து பார்த்தாலும் அந்த மலை கோவில் நல்லா தெரியும். புரட்டாசி மாசத்துல கோவில் இருக்கும் மூணாவது மலையில மட்டும் சீரியல் லைட் கட்டுவாங்க, அத ராத்திரியில பார்க்கும் போது க

ஜவ்வாது மலை கானுலா - 2

Image
15.06.20 நீர்போந்தை, படைவீடு காடு சின்ன வயசு ஆசை     எங்க ஊருல இருந்து 15கி.மீ தூரத்துல படைவீடு இருக்கு அங்க இருந்து தான் சவ்வாதுமலை காடு ஆரம்பிக்குது, வடதமிழகத்துல இன்னைக்கும் கொஞ்சம் ஊயிரோட்டமா இருக்குற மலை தொடர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட எல்லையாவும் ஆந்திரா வரையும் நீண்டு இருக்குற மலை தொடர், படைவீட்டுல காட்டு பாதை வழியா 10,15கி.மீ கடந்து 3மலைய ஏறி போனா உச்சியில கோட்டை மலை பொருமாள் கோவில் வரும், பழமையான கோவில் ஒவ்வொரு வருசமும் புரட்டாசி மாசம் மூன்றாவது சனிக்கிழமை சூரிய வெளிச்சம் நேரா சாமி மேல விழுன்னு சொல்லுவாங்க, எனக்கு அப்போ 12வயசு இருக்கும் எங்க வீட்ல எல்லாரும் ஒரு புரட்டாசி மாசம் சனிக்கிழமை கோட்டை மலை கோயிலுக்கு கிளம்பினோம், சின்ன வயசுல இருந்தே காடு, மலைன்னா அலாதியான பிரியம், ஆர்வம், அதனால எல்லாருக்கும் முன்னாடி சீக்கரமா நானும், அண்ணனும் மலை மேல ஏறிட்டோம்.  அப்ப எங்க பாட்டியும் கூட வந்துச்சு அதுக்கு அப்பவே 65வயசு இருக்கு, அந்த வயசுலையும் கடினமான மலை பாதைய ஏறி வந்தது எனக்கு அப்போ பெரிசா தெரியல, பிறகு எல்லாரும் சாமிய பார்த்தோம், அப்புறம் சாப்புட்ட பிறகு சுத்தி பாக்கல

ஜவ்வாது மலை கானுலா

Image
18.01.20 ஜமுனாமரத்தூர்           தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் முடிஞ்சி பங்காளி மதன் குமார் சேகரன் கூட பேசிட்டு இருக்கும் போது, பக்கத்துல தானே ஜவ்வாதுமலை இருக்கு போய்ட்டு வரலாமான்னு கேட்டே அவனும் உடனே சரி நாளைக்கு (மாட்டு பொங்கல்) போலாம்டான்னு சொல்லிட்டா, காடு, மலை, மரன்னு எனக்கு பிடிச்சது எல்லாம் அவனுக்கும் பிடிக்க வச்சிட்டேன் அதான் இது மாதிரி பயணங்கள் எங்க எப்ப கூப்பிடாலும் கூடனே வந்துடுவான். எங்க ஊரு ஊட்டி:-   காலை 8மணிக்கு புறப்படலான்னு திட்டம் ஆனா தூங்கி எழுந்ததே 8மணிக்கு தான், ஒரு வழியா தூங்கி எழுந்து சாப்புட்டு கிளம்ப 9 மணி ஆய்டுச்சி, எங்க ஊர் முள்ளிப்பட்டு, ஆரணியில் இருந்து ஜவ்வாது மலை (அதாவது ஜமுனாமரத்தூர்) ரொம்ப பக்கம் தான் சோ பங்காளியோட பைக்கிலேயே கிளம்பினோம், ஆனா அங்க போக எங்க ஊருல இருந்து இரண்டு வழி பாதை இருக்கு ஆரணியிலிருந்து போளூர் போய்ட்டு அங்கிருந்து அத்திமூர் வனப்பகுதி வழியாவும் ஜமுனாமரத்தூர் போலாம், மற்றொன்று ஆரணியிலிருந்து கண்ணமங்கலம் வழியா அமிர்தி வனப்பகுதி வழியாவும் போலாம். போளூர் போய்ட்டு அத்திமூர் வனப்பகுதி வழியா போகிற பாதை  தான் எங்களுக்கு நல்லா தெ

என் பாட்டியின் பனை

Image
           நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டின் கோடை வெயில் எப்போதும் போல் அல்லாமல் கொஞ்சம் கடுமையாகவே இருந்தது. வெயிலின் தாக்கத்தால் மரப் பொந்துகளில் கூட ஓணான்கள் இல்லை. வீட்டுக்கு அருகே வந்துபோகும் சில பறவைகளைத் தவிர மற்றவையின் கூச்சல் எங்களுக்குக் கேட்கவில்லை. தென்னை மரத்தில் இரண்டு அணில்கள் வேகமாக இளநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தன. பகல் நேரத்தில் காற்றும் ஒரே இடத்தில் சுழன்று வீசிக் கொண்டிருந்தது. அதைக் காண மனதில் சிறிது அச்சம் படர்ந்தது. "என்ன இது, பேய் காற்று" என்று அம்மாவிடத்திலும் அச்சத்தைப் பரப்ப தவறவில்லை, பேய் காற்றால் ஊரில் சொற்பமாக இருந்த பனை ஓலைகளால் வேயப்பட்ட செம்மண் வீடுகளின் மேற்க் கூரைகள், ஆட்டுக் கொட்டகைகள் என அனைத்தும் பெயர்ந்து போகும் அளவிற்கு ஆடிக்கொண்டிருந்தது. தான் இராட்சசன் என்னும் நினைப்பு போலும்.      ஆனால் இக் காட்சிகள் யாவும் சிறிது நேரத்தில் தலைகீழாய் மாறிப் போனது. மாலை சூரியன் தூரத்தில் இருந்த கூர்மலையின் இடையில் மெதுவாக இறங்கி கொண்டிருந்த போது காற்றின் வேகமும், அதன் வாசமும் மாறியது. திடீரென அகண்ட வானம் தூசியாலும