ஜவ்வாது மலை கானுலா - 3



05.07.2020
கோட்டைமலை காடு, படைவீடு

மீண்டும் காட்டுக்குள்

     சில வாரங்களுக்கு முன், நான் சின்ன வயசுல ஒரு மலை கோவிலுக்கு மேல இருந்து  பார்த்த பள்ளத்தாக்கு கிராமத்துக்கு போனத பத்தி பதிவு போட்டு இருந்தேன், (முந்தைய பதிவை பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம். பதிவு லிங்க் முதல் கமெண்டில் இருக்கு ) அந்த பதிவில் பலர் எங்களையும் அங்க கூட்டிட்டு போங்க நாங்களும் அந்த மலைக்கு மேல இருந்த அந்த காட்டின் அழகையும்,  அந்த பள்ளத்தாக்கு இருக்குற குட்டி மலை கிராமத்தையும் பார்க்கனும்ன்னு கேட்டு இருந்தாங்க. 

    அந்த அன்பு உள்ளங்களுக்காக மீண்டும் காட்டுக்குள் பயணம். சின்ன வயசுல எங்க இருந்து அந்த பள்ளாத்தாக்கு மலை கிராமத்தை நான் பார்த்தனோ, மீண்டும் அதே இடத்தில் இருந்து இந்த காட்டின் மொத்த அழகையும் ரசிப்போம் வாங்க.

       எங்க ஊருல இருந்து ஊச்சி மலை வரைக்கும் 35கிலோ மீட்டர்க்கும் கொஞ்சம் அதிகமா இருக்கும், ஆனா எங்க ஊருல எந்த இடத்துல இருந்து பார்த்தாலும் அந்த மலை கோவில் நல்லா தெரியும். புரட்டாசி மாசத்துல கோவில் இருக்கும் மூணாவது மலையில மட்டும் சீரியல் லைட் கட்டுவாங்க, அத ராத்திரியில பார்க்கும் போது காட்டுத்தீ மாதிரி தெரியும், கல்லூரி முடிக்குற வரைக்கும் வருசத்துக்கு ஒரு முறை ஆச்சும் தவறாம அந்த கோட்டை மலை கோவிலுக்கு போய்டுவோம். ஆனா கடைசியா அங்க போய் 8-10 வருசம் கடந்திருக்கும். அடர்ந்த காட்டு பாதை, மூணு மலைகளை கடந்து தான் கோவிலுக்கு போக முடியும் (ஆனா இப்ப கோவிலுக்காக போகல😁) அதிலும் கரடுமுரடான மலை மேடுகள், மேல இருக்குறது பெருமாள் கோவில் அதனால  சனிக்கிழமை மட்டும் மக்கள் நடமாட்டம்  இருக்கும், கோவில் நிர்வாகம் சார்பா ஒரு டிராக்டர் மட்டும் மக்கள ஏத்திட்டு போகும் (கட்டணத்தோடு), சில இடங்களில் ட்ரக் போகுறதுக்காக சிமெண்ட் ரோடு போட்டு  இருப்பாங்க ஆனா பெரும்பாலான பாதை  மண் தரை தான் கடினமான மலை வழி, பைக்கில் சாகச பயணம் செய்ய ஏற்ற மலை பாதை. அது கூட இரண்டு மலை வரைக்கும் தான் பைக், டிராக்டர்லாம் போக முடியும், மூணாவது மலையின் செங்குத்தான பாறையில தான் கோவில் இருக்கு. அதுக்கு போக சிறிய பாலமும், படியும் தான்.

   முந்திய நாள் பெய்த கடுமையான மழையால மலைக்கு போக வேண்டான்னு வீட்ல தடுத்தாங்க, ஆனா நானும் பங்காளி மதன் அத எதையும் கேட்டுக்காம சாப்புட்டு கிளம்பிட்டோம். நாங்க கிளம்பும் போதே வானம் கருமையா மழை வர மாதிரி தான் இருந்துச்சி. 

     காலையில 10மணிக்குள் அடிவார காட்டுக்கு வந்துட்டோம், ஆரம்பமே வண்டி ஒரு இடத்துல சேற்றுல இறங்கிடுச்சி. ஊரடங்கு போட்டதால மூணு, நாலு மாசமா கோவில் திறக்கல, யாரும் அந்த மலை கோவிலுக்கு போகல, இரண்டு நாளா காட்டுல கடுமையான மழை அதனால மலை பாதை நிறைய இடத்துல வழுக்கலாவும் இருந்தது, சில இடங்களில் வண்டி கீழ விழும் அளவுக்கு பாதை கடினமா இருந்துச்சி ( இதுனால தான் வீட்ல தடுத்தாங்க )

  காட்டுப் பாதையில் இது வரைக்கும் நாங்க பார்க்காத சில புதிய இடங்களில் இருந்து காட்டை ரசிச்சிட்டு கடந்தோம். மலையில பாதி தூரம் போனதும் ஒரு நீர் தேக்கம் இருக்கு அங்க நிறைய பேர் வீடு கட்டனும்ன்னு ஆசையில கல்லு வீடு கட்டி வைப்பாங்க, 90-களின் குழந்தைகளுக்கு அலாதியான விளையாட்டு, அங்க நாமளும் வீட்டு கட்டி விளையாடிட்டு கிளம்பினோம். கொஞ்ச தூரத்துல எலந்தபட்டுக்கு கிராமத்துக்கு போகுற மலை பாதை வந்துச்சி, இதை குறிப்பிட காரணம், முந்தைய பதிவில் எங்களை முருகமோந்த மலைக்கு மேல கூட்டிட்டு போனது அந்த ஊரை சேர்ந்த நண்பர்கள் தான்.

      இரண்டு மலைய கடந்து மூணாவது மலையின் அடிவாரத்துல வண்டிய நிறுத்திட்டு மேல ஏற ஆரம்பிச்சோம், மழை பெய்ததால மலை முழுக்க ஈரமாவும், பச்சையாவும் மாறி இருந்ததை பார்க்க மனசுக்கு அவ்வளவு சந்தோசமா, புத்துணர்ச்சியா இருந்துச்சி. மலை பாறைங்க உள்ளடி இருந்து நீர் சொட்டு சொட்டா வந்துட்டு இருந்தது. கடைசியா மலைக்கு மேல வந்தாச்சி மனித நடமாட்டம் இல்லாத அந்த இடத்தின் சூழல் அமைதியா இருந்தது, கோவிலுக்கு பக்கத்துல ஒரு தாய் குரங்கு அதை சுற்றி சில குட்டி குரங்குங்க அங்க இருந்த ஒரு சீத்தாப்புளி மரத்துல இருந்து பழங்களை பறிச்சி திண்ணுட்டு இருந்தது, ஆண் குரங்குகள் மழை கால கூடலில் திளைத்து இருந்தது. 

       கோவிலுக்கு பின்னாடி சின்ன வயசுல எங்க இருந்து அந்த பள்ளத்தாக்கு மலை கிராமத்த பார்த்தனோ அங்க வந்து சேர்ந்தோம், நல்ல வேகமான குளிர்ந்த காற்று முகத்ததுல வந்து அடிச்சிட்டு இருந்துச்சி, பல முறை இங்க இருந்து பார்த்து அந்த கிராமத்தை பார்த்து இருக்கே, ஆனா இப்ப பார்க்கும் போது ஒரு விதமான உற்சாக உணர்வு.

      கோவிலுக்கு இடது பக்கமா ஒரு சின்ன பாறை இருக்கும் அதை தட்டினா இரும்பு மேல தட்டுற மாதிரி சத்தம் வரும், ஆனா இப்ப அந்த பாறைய காணோம்ன்னு தேடிட்டு இருந்தோம், அப்ப தான் கவனிச்சோம் சில கேடு கெட்டவனுங்க அந்த அபூர்வ பாறையை பாதிக்கும் மேல வெட்டி எடுத்துட்டாங்கன்னு, பார்த்ததும் மனசுக்கு சங்கடமா  போச்சி அத பார்த்துட்டு.

  காட்டின் அழகை முடிந்தளவு படம் எடுத்துட்டு, அந்த குளிர்ந்த காற்றின் ஓசையை கேட்டுட்டே பாறையின் மேல் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு பின் கிளம்பி கீழ படைவீடுக்கு வர மதியம் 2மணி ஆய்டுச்சி, அங்கவே பிரியாணி வயிறு முட்ட சாப்புட்டு வீடு வந்து சேர்ந்தோம். 

  காடுகள் எப்போதும் அன்பு நிறைந்த இதயங்களின் வருகைக்காகவே காத்திருக்கும், இந்த காடும், மலையும், மரமும் எங்களை அவ்வாறே அரவணைத்து கொண்டது போல் நான் உணர்கிறேன். மீண்டும் செல்வோம் காடுகளில் தொலைந்து போக.

முகநூல் பதிவு: https://m.facebook.com/story.php?story_fbid=3020471111401123&id=100003147909711

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்