Posts

Showing posts from 2022

"அழிவின் விளிம்பில் அதிசய கிளைப்பனை"

Image
     இரண்டு ஆண்டுக்கு முன் ஐயா இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய "பனைமரம்" புத்தகத்தை வாசித்த போது அதில் வேலூருக்கு அருகில் செதுவாலை என்ற கிராமத்தில் ஏழுகிளை கொண்ட பனைமரம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அதை படித்ததும் அந்த கிளைப்பனையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நண்பனை அழைத்துக்கொண்டு அந்த அதிசய கிளைப்பனையை நேரில் பார்க்க சென்றிருந்தோம்.     பலரிடம் வழி கேட்டு கடைசியாக அவ்விடம் சென்று சேர்ந்த போது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்த புத்தகத்தில் ஏழு கிளைகள் என குறிப்பிட்டு இருந்தது. ஆனால்  நாங்கள் அங்கு சென்று பார்த்த போது அந்த பனைமரத்தில் ஆறு கிளைகள் மட்டுமே இருந்தது.     ஒரு கிளை காற்றில் முறிந்து அருகில் விழுந்து கிடந்தது, மேலும் ஒவ்வொரு கிளையும் அருகில் இருக்கும் மற்ற கிளைகளை நெருக்குவதால் விரைவில் மற்ற கிளைகளும் முறிந்து விழ வாய்ப்பிருப்பதை இரண்டு ஆண்டுக்கு முன்பே நாங்கள் பதிவு செய்திருந்தோம்.      கடந்த வாரம் திருவிழாவுக்காக ஊருக்கு சென்ற போது ஏற்கனவே திட்டமிட்டபடி மனைவியுடன் மீண்டும் அந்த கிளைப்பனையை பார்க்க சென்றி

பனை கனவுத் திருவிழா

Image
பனை கனவுத் திருவிழா      தமிழக வரலாற்றில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் பனை திருவிழாவில் ஒன்றுகூட வாருங்கள்.      உலகில் உள்ள எல்லா வகையான சமூக பண்பாட்டு படிமலர்ச்சியையும் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் வைத்திருக்கும் தமிழகத்தின் சமூக பண்பாட்டு, தொடர்ச்சியின் பேர் ஆவணமாக இருக்கும் பனையை கொண்டாட ஒன்றிணைவோம்.      ஒரு மரம் தன்னுடைய எல்லா உறுப்புகளையும் மானுட பயன்பாட்டிற்கு கொடுக்கிறது என்றால் அது பனை மரமாக தான் இருக்கும். ஒரு பனை மரம் தன் மொத்த வாழ்நாளையும் மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவே அற்பணிக்கிறது.      தமிழ் கழக காலத்திற்கு முன்பில் இருந்தே பனைசார் பொருட்கள் தமிழக மக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்துள்ளதை பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எளிய மக்களின் அன்றாட வாழ்வியலின் அங்கமாக பனைசார் பொருட்கள் இருந்தமையால் ஏறக்குறைய எல்லா தமிழ் கழக நூல்களிலும் பனையின் உணவுகளை அதன் பாகங்களை நேரடியாகவும், உவமையாகவும் அறிஞர் பெருமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.     அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இன்றும் தமிழக நிலமெங்கும் பனைசார் முன்னெடுப்புகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருக

தடா அருவி - காட்டுப்பயணம்

Image
மீண்டும் கானகம்      தமிழகத்தை தாண்டி முதல் முறையாக ஆந்திரா காட்டிற்குள் குடும்பமாக காட்டு பயணம். நான் அதிக சிரம் எடுத்து ஏறிய மலைகளில் கொல்லிமலையின் கோரக்கர் குகைக்கு சென்ற மலை ஏற்றத்தை எப்போதும் நினைவு கொள்வேன். அம்மாதிரியான நினைவின் தொடர்ச்சியில் இணைந்து கொண்டது, தாடா அருவியின் மலைகள். அதிக பட்சம் 650மீட்டரே கொண்ட உயரம் மிகக்குறைவான மலை தான் என்றாலும் மலைப்பாதை சரிவர இல்லாமல் முழுக்க பாதை முழுக்க பாறைகள் இருந்ததாலும், முந்தைய இரவு அலுவலக பணியால் தூங்காமல் அடுத்த நாள் காலை 100கிலோ மீட்டருக்கு மேல் வாகனம் ஓட்டியதாலும் மிகுந்த சோர்வோடு தான் மலையேற்றதை தொடங்கினோம். சில வாரத்திற்கு முன் வாலண்டீனா அக்கா வீட்டில் திருமணத்திற்கான முக்கறி (ஆடு, மாடு, கோழி) விருந்தை முடித்து பின் நீண்ட நாட்களாக திட்டமிட்டுக்கொண்டு இருந்த பருவதமலை பயணத்தை பற்றி பேச தொடங்கி கொலுக்குமலை சென்று இறுதியில் அடுத்த ஒரு வாரத்தில் தடா அருவிக்கு செல்வது என்று உறுதியானது. சென்னையில் இருந்து 95-100 கிலோ மீட்டருக்குள் இருப்பதாலும் ஓர் நாளில் சென்று திரும்பி வர ஏற்ற இடமாகவும்  இருப்பதால், தற்போது தடா

சிறகடிக்கும் சிட்டுக்கள் - சுட்டியானை

Image
     குழந்தைகளோடு பனை சார்ந்த உரையாடல்கள், நிகழ்வுகள்  என்பது எப்போதும் மனநிறைவை தரக்கூடியது தான்.       ஜவ்வாதுமலை முக்கூடல் தோட்டத்தில் கடந்த ஆண்டு சுட்டியானை, வலசை வாழ்வியல் பள்ளி முன்னேடுத்த குழந்தைகள் முகாமில் குழந்தைகளிடம் இருந்து கிடைத்த அனுபவம், தொடர்ந்து அவர்களுக்காக பனையோலையில் புதிய புதிய பொருட்களை செய்ய தூண்டியது.      இந்த ஆண்டும் ஜவ்வாதுமலை, மலைரெட்டியூரில் உள்ள முக்கூடல் தோட்டத்தில் குழந்தைகள் முகாம் நடத்த இருக்கிறோம் பனையோலை பயிற்சி கொடுக்க முடியுங்களா என பிரவின் அண்ணா கேட்டு இருந்தாங்க. எவ்வித முன் யோசனையும் இன்றி நிச்சயம் வந்துவிடுகிறேன் என்றேன்.     இணையரிடம் குழந்தைகள் நிகழ்வு இருக்கு போகனும் என்றதும் நானும் வரே கூட்டிட்டு போங்க என்றாள், என்னவளுடன் கலந்து கொள்ளும் முதல் பனை சார்ந்த நிகழ்வு என்பதால் கூடுதல் மகிழ்வோடு சென்னையில் இருந்து இரு தினத்திற்கு முன்னமே ஊருக்கு வந்து விட்டோம். நிகழ்வு அன்று (19.03.22) காலை 8 மணிக்குள் போளூர் வந்து அங்கிருந்து அத்திமூர் - ஜமுனாமரத்தூர் காட்டுப்பாதையில் பயணத்தை தொடர்ந்தோம்.      கடந்த ஆண்டும் இதே மார்ச் மா

உலக காடுகள் தினம்

Image
* காடு, மிகவும் தூய்மையான இடம் மட்டும் அல்ல; மனித இதயத்துக்கு மிக நெருக்கமான இடமும் கூட. ஒருவனுக்குள் இருக்கும் உண்மைகளை எளிதில் உதிர்க்கச் செய்யும் ஆற்றல் காட்டுக்கு உண்டு. காட்டின் ஊடே செல்லும் ஒருவனால் கபடத்தனத்தை மறைத்து பயணப்பட முடியாது. * காடு என்பது அடர்ந்த தாவர கூட்டம் மட்டும் அல்ல, அது சிறு சிறு பூச்சிகளில் இருந்து யானைகள் வரை இருக்கக்கூடிய ஒரு பெரும் பல்லுயிரிய தொழில்கூடம். * உலகில் மனித ஆக்கிரமிப்புகள் அதி வேகமாக நடக்கும் நிலம் காட்டின் நிலமாகவே இருக்கிறது.  *உலகில் மனிதர்களால்  அதிகமாக அழித்தொழிக்கப்படும் உயிரிகள் காட்டுயிரிகளாக தான் இருக்கின்றன. * உலகில் பல்லுயிர்மைக்கு பெரும் ஆதாரமாக விளங்கும் காடுகளை மனித இனத்தை தவிர எந்த ஒன்று இவ்வளவு வேகமாக அழித்தது இல்லை.  * நாம் நினைப்பதை காட்டிலும் காடு எண்ணிலடங்கா உயிராற்றலை கொண்டது, மனிதனின் அறிவை மட்டும் வைத்துக்கொண்டு காட்டை உள்வாங்குவதோ, உணர்வதோ சாத்தியம் இல்லை. * இங்கு நாம் குப்பைகளை தரம் பிரிக்க அல்லது சுத்தம் செய்ய பெரும் மனித ஆற்றலையோம், பெரும் பொருளாதாரத்தையும் செலவிட வேண்டியுள்ளது, ஆனால் காட்டில் ஒ

பனை தொழிலை அவமானபடுத்தும் தமிழக காவல்துறை

Image
     சில நாட்களுக்கு முன் ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பனையேறிகள் பெரும்பான்மையாக உள்ள கிராமத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் வைக்கப்பட்ட விளம்பர பதாகையில் "கொரோனா" மற்றும் "கள்ளச்சாராயம்" விழிப்புணர்வு கூட்டம் என்று எழுத்தப்பட்டது தான் பெரும் ஏமாற்றத்தை கொடுக்கிறது.      மேற்கூறிய அந்த கிராமம் மட்டுமல்லாது அதை சுற்றியுள்ள கிராமங்கள் முழுக்க பனையேறிகள் வாழக்கூடிய பகுதிகள். அவர்கள் பல தலைமுறைகளாக அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிரதான தொழிலே பனைமரம் ஏறுவதும், பனங்கள் இறக்குவதும் தான். பனங்கள் பருவம் இல்லாத காலங்களில் சிலர் ஈச்சம், தென்னங்கள் இறக்குவர், சிலர் கூலி வேலைகளுக்காக வெளியூர் செல்வர்.       தமிழக அரசு கள்ளுக்கு தடைவிதித்ததால் கடந்த 30ஆண்டுக்கும் மேலாக, பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் அவர்கள் சொல்லன்னா துயரத்தை சந்தித்து வருகின்றனர். நிலைமை இப்படி  இருக்கையில் பனங்கள் இறக்கும் பனையேறிகள் மீது கள்ளச்சாராயம் காய்ச்சியதாகவும்,  எரிசாராயம் வைத்திருந்ததாகவும் பொய