Posts

Showing posts from 2023

மஞ்சு மலை காட்டுப்பயணம்

Image
#காவிரி_வடக்கு_வனஉயிரின #சரணாலயம் #கிழக்கு_தொடர்ச்சி_மலை #கானகனின்_கான்      கடந்த ஆண்டு சத்தியமங்கலம் குன்றி மலையில் இருந்து அடர்ந்த காட்டின் ஊடாக பயணித்து மாதேஸ்வரன் மலைக்கு சென்ற போது ஏற்பட்ட அதே திகில் நிறைந்த பயண அனுபவம் இம்முறை மஞ்சு மலைக்கு சென்ற போதும் நிகழ்ந்தது.      பிறந்த நாளின் நினைவாக எப்போதும் நமக்கு நெருக்கமாக இருக்கும் காடு, மலைக்கு பயணம் செல்லலாம் என ஏற்கனவே முடிவு செய்திருந்தேன்.      அதன்படி தேன்கனிக்கோட்டைக்கு அருகில் இருக்கும் அய்யூர் வனப்பகுதிக்குள் (காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம்) உள்ள தொழுவப்பெட்டா மலைக்கு செல்வது என்றும் பின் அங்கிருந்து ஏற்கனவே போக நினைத்த பெட்டமுகிலாம் சென்று பின் இறுதியாக பஞ்சபள்ளி அணையை பார்த்துவிட்டு வீடு திரும்பலாம் என்பது தான் பிறந்த நாளுக்கான பயண திட்டமாக இருந்தது.      ஆனால், நாம் திட்டமிடாத பயணங்களே நமக்கான நிறைவான நினைவுகளை கொடுத்துவிடுகின்றன.      அய்யூர் வனத்திற்குள் தனித்து இருக்கும் தொழுவப்பெட்டா மலை கிராமத்திற்கு செல்வதகான வழியை வழக்கம் போல் Google Map-ல் பார்த்த போது, அடர்ந்த காடுகளை, மலைகளை தாண்டி மஞ்சமலை என்ற ம

நுரோந்துசாமி மலைப்பயணம்

Image
#காவிரி_வடக்கு_வனஉயிரின #சரணாலயம் #கிழக்கு_தொடர்ச்சி_மலை #கானகனின்_கான் #யானைக்காடு ஜவலகிரி வனப்பகுதி  - நடுகல் - இளநீர் கோயில் - நுரோந்துசாமி மலை மடம்       மஞ்சிமலை காட்டுப் பயணத்திற்கு பிறகு, காவிரியின் வடக்கு வன உயிரின சரணாயலத்தின் மலைப்பகுதிகளில் இருக்கும் தனித்த மலை கிராமங்கள் குறித்து வழக்கம் போல் Google Satellite Map-ல் தேட ஆரம்பித்தேன். அப்போது ஓசூர், தளி அடுத்த ஜவலகிரி வனப்பகுதியின் மலைகளில் நிறைய சிறிய சிறிய மலை கிராமங்கள் இருப்பதை பார்த்தேன்.      ஜவலகிரியில் இருந்து இன்னும் தொலைவில் உள்ள மலை கிராமங்களை தேடிப்பார்த்த போது, ஜவலகிரி காட்டுப்பகுதியில் இருந்து தெற்கே 50கி.மீ தொலைவில் நுரோந்து சாமி மலை என்ற மலை கிராமம் தனித்து இருப்பது தெரிந்தது. கிராமத்தின் பெயரே வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் அங்கு சென்று பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.      ஓசூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (17.11.23) காலை நுரோந்து சாமி மலைக்கான பயணம் ஆரம்பமானது. மிதமான வெயிலும், வானம் ஓரளவு கறுத்தும் இருந்தன. தளி பகுதியை கடந்து ஜவலகிரி வரும் வரை சாலையோரங்களில் ஏராளமான பனை மரங்க

கிளை(த்த)ப்பனை, பண்ணந்தூர்

Image
     பல பேர் பதிவுகளிலும், பல முறை செய்திகளில் இப்பனைகளை பார்த்திருந்தாலும், இப்போது தான் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.      நூற்றாண்டு வரலாறு கொண்டுள்ள இப்பனைகள், இன்று இறையின் வடிவாக மக்களால் பூசிக்கப்படுகிறது. இப்பனைகளின் காய்ந்த மட்டைகளும் கூட மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளாமல் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு உணவு சமைக்க எரிபொருளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.      முதிர்ந்த இரண்டு கிளைப்பனைகள் ஓரிடத்திலும், அதற்கு எதிரே ஓரளவு இளம் இரண்டு கிளைப் பனைகளையும் நாம் காண முடிகிறது. இயல்பான பனை மரங்களில் இருப்பதை விட இவற்றில் ஓலையும், மட்டையும், கருக்குகளும் கூட சற்று வித்தியாசமாக இருக்கிறது.      ஓலைகள், மட்டைகள் இயல்பை விட அளவில் சிறிதாகவும் மட்டைகளின் கருக்குகள் இயல்பை விட பெரியதாகவும் இருக்கிறது.      இதற்கு முன்னர், வேலூர் மாவட்டத்தின் செதுவலை கிராமத்தில் பார்த்த ஆறு கிளைகள் கொண்ட பனையும், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி - வந்தவாசி சாலையில் ஆவணியாபுரம் அருகில்  பார்த்த நான்கு கிளைகள் கொண்ட பனைகளின் பனங்காயும், பனபழமும் இயல்பான பனையை போலத்தான் இர

கொழுக்குமலை - மூணார் பயணம் - பகுதி 3

Image
சூரியநெல்லி - கற்திட்டை -  கொளுக்குமலை - ஆனையிறங்கி - போடிமெட்டு - தேனி - திண்டுக்கல்      உயர்ந்த மலையின் சரிவில், சுற்றிலும் நீண்ட பள்ளத்தாக்கு நிறைந்த இடத்தில் தான் இரவு தூங்கியிருக்கிறோம்.      காலையில் கூடாரத்தில் இருத்து எழுந்து வெளியே வந்து பார்த்த போது எதிரே தூரத்தில் தொடர்ச்சியான மலை முகடுகளும், ஆங்காங்கே சில மலை கிராமங்களும், அம்மலை கிராமங்களை இடைவிடாது மோதிச்செல்லும் மேகங்களும், இருமலைகளுக்கும் இடையே நீண்ட பள்ளத்தாக்கும் என பார்க்கும் காட்சிகாள் யாவும் பிரம்மிக்க வைத்தது.      ஓரளவு பாதுகாப்பாக மலைச்சரிவில் சற்றே கீழ் இறங்கி பார்த்த போது அருகே இருந்த புல்வெளிகள் மட்டுமே நிரம்பி இருந்த மற்றோரு மலையையும் பார்க்க முடிந்தது. அங்கிருந்து இவ்விடத்தை சுற்றி பார்க்கலாம் என அங்கே கிளம்பினோம்.      தங்குமிடத்தில் காலையில் கொடுத்த சூடான தேனீரை குடித்துவிட்டு விரைவாக அந்த புல்வெளி மலையை நோக்கி நடக்க தொடங்கினோம். 10 நிமிட நடையிலேயே அவ்விடம் வந்து விட்டது.      அம்மலைக்கு செல்லும் வழியில் சாலையோரம் பெரும் பாறைகளை அடுக்கி வைக்கப்பட்ட ஒரு கூடாரமும், அதன் எதிரே இரும்ப

கொழுக்குமலை - மூணார் பயணம் - பகுதி 2

Image
மறையூர் - சந்தனக்காடு - ஆனைமுடி - மூணார் - சூரியநெல்லி      தூவானம் அருவியை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு பயணத்தை தொடர்ந்த போது மழை தூரல் அதிகரித்திருந்தது. காட்டு தாவரங்களில் இருந்து வரும் குளிர்காற்று மெல்ல உடலை ஊடுறுவத் தொடங்கியது.       மாலை 4மணி இருக்கும் நாங்கள் மறையூர் - காந்தலூர் சாலை சந்திப்புக்கு வந்திருந்தோம். காந்தலூரில் இரைச்சல் அருவியும், கற்கால ஈமச்சின்னங்களும், நிறைய  பார்க்க வேண்டிய இடங்களும் இருந்தன. ஆனால், ஏற்கனவே நேரமாகி இருந்ததால் அங்கே செல்ல முடியாமல் பயணத்தை தொடர்ந்தோம்.      மறையூர் அடுத்து வரும் சந்தனக்காட்டு பகுதியும் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் குறிப்பிட்டிருந்தார் பாஸ்கர் அண்ணா.      மறையூரில் இருந்து சில கி.மீ தொலைவுகளில் முழுக்க சந்தன மரங்கள் மட்டுமே நிரம்பிய சந்தன மரக்காடு தொடங்கிவிடுகிறது.      சந்தனமரத்திற்கு ஊடு பயிராக மற்ற மரங்களை வளர்த்தால் தான் நல்ல மகசூல் வரும் எனச்சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்பகுதியில் பல நூறு ஏக்கரில் முழுக்க முழுக்க சந்தன மரங்கள் மட்டுமே  நிறைந்த தோப்பாக இருந்தது. ஆங்காங்கே சந்தன மரக்கன்றுகள்

கொழுக்குமலை - மூணார் பயணம் - பகுதி 1

Image
திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் - பழனி - உடுமலை - ஆனைமலை, சின்னார் வனப்பகுதி      பருவ மழை காலத்தில் ஒரு முறையேனும் கேரளத்தின் சோலைக்காடுகள், புல்வெளிக்காடுகளை பார்த்திட வேண்டும், அக்காடுகளில் பயணித்திட வேண்டும் என்ற நீண்ட நாள் ஏக்கம் இப்பயணத்தில் ஓரளவு நிறைவேறியது.      கடந்த மாத இறுதியில் வந்த தொடர் விடுமுறையில் மூணார் அடுத்த தமிழக, கேரள எல்லையில் தனியார் தேயிலை தோட்டப்பகுதிக்குள் இருக்கும் கொளுக்குமலைக்கு போகலாமா என தம்பிகளிடம் கேட்டிருந்தேன். அவர்களும் உடனே சரி எனச் சொல்ல கொளுக்குமலை செல்வது எனப்பயணம் உறுதியானது.      மூணார் அடுத்த சூரியநெல்லி என்ற மலை கிராமப் பகுதியில் தான் கொளுக்கு மலை இருக்கிறது என்ற தகவல் மட்டுமே எங்களுக்கு தெரியும். அம்மலைக்கு எப்படி செல்வது, எங்கு தங்குவது, யாரை அணுகுவது என்ற எந்த தகவலும் அதுவரை எங்களுக்கு தெரியாது.      கோவை சதாசிவம் ஐயாவோடு முன்னர் ஒருமுறை சின்னார் வனப்பகுதியில் கானுலா சென்றிருந்த நிகழ்வை ஒருங்கிணைத்த அண்ணன் மோகன்ராஜ் நினைவுக்கு வர அவரிடம் தகவலை சொல்லி உதவி கேட்டிருந்தேன்.      அவர், மூணாரில் சூழல் சார்ந்த கானுலாக்களை ஒருங்கிணைக்கு

கொடக்கரை காட்டு பயணம்

Image
பனை - காடு - மலை - மழை - யானை- பயணம் 'இனிது இனிது ஏகாந்தம் இனிது' என்றார் ஒளவை.      நிச்சயம் ஔவையும் காடோடியாக இருந்து தான் இதை சொல்லியிருப்பார். ஏகாந்தத்தின் இன்பத்தை அவர் காட்டில் தான் அனுபவித்திருப்பார்.      சமீபமாக நான் ஓசூர் வரும் ஒவ்வொரு முறையும், வார இறுதி நாட்களில் கிழக்கு மலைகளில் யானைகளின் முக்கிய காடான காவிரியின் (வடக்கு) காடுகளுக்குள் பயணப்படும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.      அப்படியாக கடந்த மாதம் ஓசூர் வந்திருந்த போது வடக்கு காவிரி வன உயிரின சரணாலயத்தின் காட்டு பாதையில் முதல் முறையாக பயணித்து ஒக்கேனக்கல் அருவிக்கு சென்றிருந்த அனுபவத்தை பகிர்ந்திருந்தேன்.      அப்பதிவை பார்த்திருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த அக்கா ஒருவர் பெட்டமுகிலாம் மலைக்கு செல்ல வாய்ப்பிருந்தா அந்த மலைக்கும் போய்ட்டு வாங்க என சொல்லியிருந்தார்.      அவர் சொல்லியத்தில் இருந்தே பெட்டமுகிலாம் மலைப்பகுதியை தேடத் தொடங்கினேன். அப்பகுதியின் வரைபட அமைப்பை பார்த்ததும் அடுத்த பயணம் நிச்சயம் பெட்டமுகிலாம் மலைக்கு சென்று பின் பஞ்சபள்ளி அணைக்கு செல்வது என திட்டமிட்டிருந்தேன்.      பெரும்பாலும் தனித