Posts

Showing posts from May, 2021

கொல்லிமலை பயணம் - பகுதி 3

Image
கொல்லிமலை பயணம் கடைசி நாள் கொல்லிமலை அருவிகள்     இந்த பயணத்தில் நான் கொஞ்சமும் எதிர்பார்த்திட கொல்லிமலை சித்தர் குகைகளை பார்க்க முடிந்தது பெரும் மகிழ்வை கொடுத்தது. அடர்ந்த காட்டிற்குள், மலையேற்றத்தில் சித்தர் குகைகளை பார்த்துவிட்டு வந்த பின் இரவு கால்களில் வலியை உணர முடிந்தது.       ஆனால், அந்த காட்டுபயணத்தின் நினைவுகளால் உடலின் வலிகளை மறக்கடிக்க செய்து விட்டது.      கொல்லிமலை பயணத்தின் கடைசி நாளான இன்று மேலும் சில இடங்களை பார்த்துவிட வேண்டும் என காலையில் விரைவாக நாங்கள் தங்கியிருந்த மலைவீடு விடுதி அறையை காலி செய்துவிட்டு நானும் தம்பியும் கிளம்பினோம்.      நேற்று சித்தர் குகையை பார்த்து முடித்ததும் நண்பன் பிரபு மற்றொரு பயணத்திற்காக நேற்று இரவே கிளம்பிவிட்டான்.       எப்படியும் இன்று கொல்லிமலையின் முக்கிய அருவியான ஆகாய கங்கையை பார்த்து விட வேண்டும் என்பது தான் திட்டம், போகிற வழியில் சில இடங்களை பார்த்துவிட்டு போகலாம் ஆனால் நேரத்தை விரயம் செய்திடாமல் கிளம்ப வேண்டி இருந்ததால் காலை உணவை விரைந்து முடித்துக்கொண்டோம்.       செம்மேட்டில் இருந்து அரப்பலீஸ்வரர் கோயிலுக்கு செல்கிற பாதையில் 5கி.ம

கொல்லிமலை பயணம் - பகுதி 2

Image
கொல்லிமலை பயணம் இரண்டாம் நாள் கொல்லிமலை சித்தர் குகைகள்       நேற்று இரவு மணி 10.30க்கு கொல்லிமலையில் முக்கிய இடமான அரபலீஸ்வரர் கோயில் பகுதிக்கு சென்றிருந்தோம். கோவிலின் வீதிகள் வெறிச்சோடி, ஒரு சில தேனீர் கடைகள் மட்டும் திறந்திருந்தது. அதில் ஒரு கடையில் அமர்ந்து தேனீர் குடித்துக் கொண்டே இந்த மலை பற்றியும், கோவில் பற்றியும் தெரிந்து கொள்ள அங்கே வேலை செய்யும் நபரிடம் பேச்சு கொடுத்தோம்.      சாதாரணமாக பேச தொடங்கிய அவர் அடுத்த அரைமணி நேரம் பேசியதை கேட்டு முடிக்கும் போது நாங்கள் நிச்சயம் வேறு ஒரு உலகிற்குள் நுழைந்து விட்டோம் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டேன்.      திருச்சியை பூர்வீகமாக கொண்ட அவர் 14வயதில் கொல்லிமலைக்கு வந்துள்ளார். இன்றளவும் திருமணம் செய்து கொள்ளாமல் சிவனே கதி என இருக்கிறார். கோயிலின் தல வரலாற்றை புராண கதைகளோடு இணைத்து கொஞ்சம் மிகைபடுத்தி சொல்லியதால் நான் அதை பெரிதாக உள்வாங்கி கொள்ளவில்லை.      ஆனால் அதன் பின் இந்த மலை எங்கும் உள்ள சித்தர்களின் குகைகளை பற்றி சொல்ல தொடங்கிய போது தான் அவர் சொல்ல வருவதை கூர்ந்து கவனிக்க முற்பட்டேன். கொல்லிமலையின் அடர்ந்த காடுகளுக்குள் இருக்கும்

கொல்லிமலை பயணம் - பகுதி 1

Image
கொல்லிமலை பயணம் முதல் நாள்       2020 டிசம்பர் மாத கடைசி வார நாட்களில் கொல்லி மலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பயணத்தின் அனுபவ பகிர்வு. நெடும்பயணம் செல்ல வேண்டும் என்ற ஏக்கத்தின் தொடக்கம்.       கொரானா நோய் தொற்று ஊரடங்கு காரணமாக பெரும்பாலும் வீட்டில் இருந்தே பணி செய்ததால் கடந்த 8 மாத காலமாக அலுவலக விடுப்பு எடுக்காமல் இருந்தேன். ஆகையால் டிசம்பர் 25 (2020) கிருத்துமஸ் தொடங்கி அடுத்த பத்து நாட்கள் அலுவலக விடுப்ப எடுப்பது என முன்கூட்டியே திட்டமிட்டு அலுவகத்திலும் சொல்லியாகி விட்டது.      அடுத்து எங்கே செல்வது, எந்த காட்டுக்கு, எந்த மலைக்கு போவது குறித்த சிந்தனையில் இருந்த போது நெருங்கிய தோழி ஒருங்க வெள்ளையங்கிரி, சதுரகிரி, சத்தியமங்கலம் மலைகளுக்கு செல்ல யோசனை சொல்லிருந்தாங்க. ஆனால் எனக்கோ மாஞ்சோலைக்கு செல்ல வேண்டும் என விருப்பம் இருந்தது.       ஆனால் அப்போதைய பொருளாதார சிக்கலால் மேற்கூறிய எந்த இடத்திற்கும் செல்ல வாய்ப்பில்லை என புரிந்தது. எனவே அருகில் இருக்கும், இரண்டு, மூன்று நாட்கள் மட்டும் தங்குவது போன்று ஏதுவான மலைப்பகுதியை தேடினேன்.      அப்போது தான் வெகு நாள் யோசனையில் இருந்த கொல்ல

சங்கப்புகழ் செங்கம் - மரபு நடை

Image
சங்கப்புகழ் செங்கம் - ஜவ்வாதுமலை மரபுநடையில் பார்வையிட்ட இடங்கள்:-   1. செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோயில் - ஓவியங்கள் 2. செங்கம் ரிஷபேஷ்வர் கோயில் - கல்வெட்டுகள் 3. செங்கம் நடுகற்கள் 4. வலையாம்பட்டு தமிழர் கணக்கியல் மையம் 5. ஜவ்வாதுமலை மேல்பட்டு நீர்மருது மரம் 6. ஜவ்வாதுமலை நடுகற்கள் மற்றும் பெருங்கற்கால சின்னங்கள் 7. கோவிலூர் சிவன் கோயில் கல்வெட்டுகள்       கல்வெட்கள், நடுகற்கள், பெருங்கற்கால தொல்லியல் சின்னங்கள் என பலவற்றை பல இடங்களில் பல பயணங்களில் பார்த்து இருக்கிறேன், ஆனால் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்க்கும் வாய்ப்பு திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் முன்னேடுத்த 9வது மரபுநடையில் தான் கிடைத்தது. நம்முடைய வரலாற்றை அறிந்து கொள்வதும், அவற்றை பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியதுவம் வாய்ந்து என்பதை மீண்டும் இந்த மரபு பயணத்தில் உணர்ந்து கொண்டேன்.     செங்கத்தில் நிகழ்வு காலை 7மணிக்கு ஆரம்பிப்பதால் அதிகாலையே நானும் பங்காளி மதன்னும் கிளம்பினோம், எங்களோடு தம்பி லோஷ்-ம் இணைந்து கொண்டார். மார்கழி மாத குளிர் எப்பவும் போல் அல்லாமல்  குறைந்தே இருந்தது எனவே 1மணி நேர பயணத்திற்குள் செங்கம்

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

Image
     அப்போது கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன், வழக்கம் போல் கல்லூரிக்குள் நுழையும் போது வாசலில் பெரிய கரும்பலகையில் இன்று கல்லூரி விடுமுறை என்று எழுதி வைத்திருந்தனர், பெரும்பாலான மாணவர்கள் எந்த சலனமும் இன்றி விடுமுறையை நினைத்து மகிழ்வு கொண்டிருந்தனர் ஒரு சிலரை தவிர.      நானும் என் சக நண்பர்களும் வகுப்பு ஆசிரியரின் அறையில் அன்றைய துயர்மிகுந்த செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தோம். இலங்கை இராணுவத்தின் தந்திரோபாய நகர்வுகள் ஈழத்தின் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றிக்கொண்டிருந்தது.      ஈசல் போல மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர், ஒவ்வொரு பகுதிகளாக புலிகளின் கட்டுப்பாடில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்பு வசம் சென்று கொண்டிருந்தது. மதியத்திற்கு பிறகான செய்திகள் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு மக்கள் No Fire Zone எனப்படும் கட்டுப்பாட்டு பகுதியில் சிறைபிடிக்கப்பட்டனர் என்பதை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தது. தொடர்ந்து வந்த செய்திகள் மனதை மேலும் மேலும் இறுக்கமாக்கி கொண்டிருந்தன.      கந்தக கரும்புகை மூட்டத்தின் ஊடே பல நூற்றுக்கணக்கான பனை மரங்களும், பனை அரணாக காத்து ந