புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்


     அப்போது கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன், வழக்கம் போல் கல்லூரிக்குள் நுழையும் போது வாசலில் பெரிய கரும்பலகையில் இன்று கல்லூரி விடுமுறை என்று எழுதி வைத்திருந்தனர், பெரும்பாலான மாணவர்கள் எந்த சலனமும் இன்றி விடுமுறையை நினைத்து மகிழ்வு கொண்டிருந்தனர் ஒரு சிலரை தவிர.


     நானும் என் சக நண்பர்களும் வகுப்பு ஆசிரியரின் அறையில் அன்றைய துயர்மிகுந்த செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தோம். இலங்கை இராணுவத்தின் தந்திரோபாய நகர்வுகள் ஈழத்தின் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றிக்கொண்டிருந்தது.


     ஈசல் போல மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர், ஒவ்வொரு பகுதிகளாக புலிகளின் கட்டுப்பாடில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்பு வசம் சென்று கொண்டிருந்தது. மதியத்திற்கு பிறகான செய்திகள் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு மக்கள் No Fire Zone எனப்படும் கட்டுப்பாட்டு பகுதியில் சிறைபிடிக்கப்பட்டனர் என்பதை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தது. தொடர்ந்து வந்த செய்திகள் மனதை மேலும் மேலும் இறுக்கமாக்கி கொண்டிருந்தன.


     கந்தக கரும்புகை மூட்டத்தின் ஊடே பல நூற்றுக்கணக்கான பனை மரங்களும், பனை அரணாக காத்து நின்ற புலிகளும், அப்பாவி தமிழர்களும் எரிந்து கொண்டிருந்தனர். அரை நூற்றாண்டை கடந்த போராட்ட வாழ்வு முற்றாக நசுக்கப்பட்டு இருந்தது, உலக தமிழர்களின் நம்பிக்கை ஒளிக்கீற்று அணைக்கப்பட்டு இருந்தது.


     ஒரு கட்டத்தில் எங்கள் ஆசிரியர் செய்தி கேட்பதை நிறுத்திவிட்டு சத்தமிட்டு அழ தொடங்கிவிட்டார், எங்களாலும் அதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை, எங்களின் அழுகுரல்கள் அடுத்தடுத்த அறைகளுக்கு சென்று சேர்ந்தது. மேற்சொன்ன அந்த சில மாணவர்களும் எங்களோடு இணைந்து கொண்டனர். சத்தமிட்டு அழுவதும் அருகில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்வதையும் தவிர நாங்கள் ஏதும் செய்ய முடியாத இயலாமையில் அன்று நின்று கொண்டிருந்தோம்!


    ஆனால் இன்று தொடுவானத்தில் நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிகிறது, தேசிய தலைவரின் கனவான தமிழருக்கான நிலம் நிச்சயம் தமிழர் வசப்படும் என்ற அரைகூவலை விடுத்தது அந்த ஒளிக்கீற்று. 

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

பனை சதிஷ்
18.05.2021

Comments

  1. கூடிய விரைவில் வானத்தில் ஒளி வீசும் சூரியனாய் உங்கள் நம்பிக்கை வெற்றி பெறும்.

    ReplyDelete
  2. இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை.. தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்

    ReplyDelete
  3. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் கண்டிப்பாக நிறைவேறும்.

    ReplyDelete
  4. விதைக்கப்பட்டது....துளிர்விடும்...

    ReplyDelete
  5. காத்திரு பகையே....

    ReplyDelete
  6. காத்திரு பகையே......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்