Posts

Showing posts from February, 2021

கள்ளின் தொன்மை பகுதி - 5

Image
     பனை மரத்தின் பாளையைச் சீவுவதால் கிடைக்கும் இனிப்பான சாறை உடனடியாகப் பருகினால், அது பசியைத் தூண்டும், சிறுநீர்ப்போக்கை அதிகரிக்கும்.      மரத்திலிருந்து இச்சாறை இறக்கிய பின்னர், அப்படியே சிறிது நேரம் வைத்திருந்தால் இச்சாறு மெதுவாகப் புளிப்படையத் தொடங்கும் இதிலுள்ள இனிப்புப் பொருளை நுண்ணுயிரிகள் (பாக்டிரியாக்கள்) புளிப்படைய வைப்பதுதான் இதற்குக் காரணம்.      இவ்வாறு புளிப்படைவதன் அடுத்த கட்டமாக, லாக்டிக் அமிலம், அசிடிக் அமிலம் ஆகியன இச்சாறில் உருவாகின்றன. இவ்விரு அமிலங்கள் உருவாவதால் எதில் ஆல்க்காலின் என்ற வேதியியல் பொருளின் விழுக்க இச்சாறில் கூடுதலாகும். இதன் விளைவாக இனிப்பான சாறு போதையூட்டும் தன்மையை அடைகிறது. இத்தன்மையை அடைந்த பின்னரே இனிப்பான சாறு 'கள்' ஆகிறது.      கள்ளில் இடம்பெற்றுள்ள போதைத் தன்மையானது அரிசி, பார்லி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் 'பீர்' என்ற மதுவகையில் காணப்படும் போதைத் தன்மையைவிடக் குறைவானதாகவே உள்ளது. நாளான கன் என்றால் பருக்கு இணையாக இருக்கும். எப்படி இருந்தாலும் கள்ளும் பீரும் வரைதான் போதைத்தன்மை கொண்டுள்ளன. ஆனால், பீர்தயாரிப்

கள்ளின் தொன்மை பகுதி - 4

Image
கள்ளின் தொன்மை பகுதி - 4      பனை மரத்தின் சிறப்பான பயனாக அமைவது அதன் பாளைகளிலிருந்து பெறும் இனிப்பான சாறு ஆகும். இதுவே 'கள்' என்றும் 'பதநீர்' என்றும் அழைக்கப்படுகிறது. இது பனையின் பாளையிலிருந்து இயல்பாகக் கிடைப்பதில்லை. சில கருவிகளின் துணைகொண்டு பாளையை நசுக்கி இது பெறப்படுகிறது. இது குறித்து, - பனை மரத்திற் பாளைவருங்காலம் பருவம் பார்த்ததைத் - தாழரி திடுக்குத் தடிகொண்டு இடுக்கிப் பிழையால் அடித்து நுனியை அறிந்து - மடக்கியே முட்டிவாய் வைத்து முடித்துவிடின் மெல்லவே மட்டுவாங் கள்கூறி வந்திருக்கும். என்று தாலவிலாசம் விவரிக்கிறது.      பனையில் கிடைக்கும் சாறு அமிர்தத்துக்கு ஈடானது என்று கூறும் 'சான்றோர் குலமரபு காத்தல்' என்னும் நூல், அதை மரத்திலிருந்து சேகரித்து, இறுமாந்து நிற்கும் காட்சியை, அந்தக் கற்பக விருட்சத்தின் மீது ஏறி அதன் மட்டையில் சிம்மாசனபதி போல் இருந்து கொண்டு, அதன் சிரசைச் சிங்காரஞ்செய்து, அதன் இனிய பாளைகளைச் சிக்குநீக்கி வெளிப்படுத்தி வித்தைப் பிரயோயங்கள் பண்ணி, புது அமுதக் கலசங்களில் வடிக்கின்ற தெள்ளமிர்தத்தைக் கும்பத்தில் வடித்துக் கொண்டு

கள்ளின் தொன்மை பகுதி - 3

Image
     பனை மரத்தைக் குறிக்க மிகுதியான சொற்கள் இருப்பது போல (பி.இ. அதிலிருந்து பெறும் கள்ளைக் குறிக்கவும் சொற்கள் பல வழக்கில் இருந்துள்ளன இச்சொற்களை நிகண்டு நூல்கள் தொகுத்தளித்துள்ளன. அந்நூற்பாக்கள் வருமாறு கள்ளின் பெயர் இக்கு, நனை, தேன், முருகு, தோப்பி நறவு, பிரசம், தணியல், சுரை, படு வேரி, மட்டு, தேறல், சாறு பானம், வடி, பிழி, மது, வழி, தொண்டி , (ஆன) அரிட்டமும், சாதியும், கள் ஆகும்        (திவாகரம்: 111) (அருகிக்) கௌவையும், விளம்பியும் (ஆகும்)      (திவாகரம்: 112) பாலி, சுமாலி, ஆலி, மருட்டம் மாலி, முண்டகம், சாலி, மாரி பாடலி, மௌலி, சிக்கர், ஞாளி பாணி, குந்தி, மதுகரம், கவிகை ஆசவம், ஆம்பல், அம்பி, அம்பதை, மேதை, கஞ்சா, விகுணி. சுலோகி (பேத வகைகள் (பெயர் என அறைவர்)   (திவாகரம்: 6:113) பாலி, பிழியே, படு, மது, தணியல் சாலி, ஆலி, ஆலை, சாறு, மாதவம், சாதி, கரையே, மாரி, மதுவம், வேரி, தொப்பி, தேறல், நாவு, பிரசம், ஆம்பல், இரேயம், தொண்டி, நனை, மாலி, அரிட்டம், ஆசம், கௌவை, கவிகை, கலோகி, கண்டை, வெறியே, அம்மியம், வாருணம், பானம் அயே, மேதை, முண்டகம், பாரி, மட்டு, காலி, சாயனம், காதம், MR. எலி, வாணித