Posts

Showing posts from November, 2020

ஜவ்வாது மலை கானுலா - 5

Image
#குள்ளர்_குகை (megalithic site)      ஜவ்வாது மலை பல ஆச்சரிய, அதிசயங்கள் நிறைந்த இடம், மலையேற்றத்திற்கும், மலை பயணத்திற்க்கும் ஏதுவான இடம், எந்த வித தொந்தரவும் இல்லாமல் இயற்கையை மட்டும் ரசிக்க விரும்பும் உள்ளங்களுக்கு ஏற்ற இடம். இந்த மலைக்கு கிழக்கே 30-40 கி.மீ தூரத்தில் தான் எங்கள் ஊர் (ஆரணி) உள்ளது, எனவே தான் இந்த கொரோனா காலத்தில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் மலைக்கு போக முடிந்தது, ஆனால் ஒவ்வொரு முறை இந்த மலைக்கு போகிற போது பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு பார்க்க முடியாமல் இருந்த இடம் தான் கீழ்சிப்பிலியில் இருக்கும் குள்ளர் குகைகள், ஆனால் எப்படியும் இந்த முறை பயணத்தில் குள்ளர் குகையை பார்த்தே தீர வேணும் என்ற வேட்கையோடு பங்காளி மதன் உடன் காலை 8.30ணிக்கு ஊரில் இருந்து கிளம்பினோம். குள்ளர் குகை:-      2300 - 2500 ஆண்டுக்கு முன் பெருங்கற்காலத்தில் (megalithic period) வாழ்ந்த குள்ள மனிதர்களால் கட்டப்பட்டதாகவும், முன்பு மலைகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இறந்த தம் முன்னோர்களை அடக்கம் செய்ய அமைக்கப்பட்ட ஈமச் சின்னம் என்றும் வரலாற்று ஆய்வாளார்களால் சொல்லப்படகிற சிறிய அளவிளான

ஜவ்வாது மலை கானுலா - 4

Image
ஜவ்வாது மலை காட்டுப்பயணம் வித் தம்பி    அன்பு நிறைந்த உள்ளங்களையே காடுகள் எப்போதும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது. அப்படி காடுகளோடு தன்னையும்  இணைத்துக் கொள்ள தம்பி சந்தோசு சென்னையில் இருந்து நீண்ட தூரம் பயணித்து சனிக் கிழமை காலை 25.10.20 ஆரணி வந்து சேர்ந்தான்.      முதலில் அவனை கூட்டிக் கொண்டு சவ்வாது மலை தொடரில் உள்ள படைவீடு அடுத்த கோட்டைமலைக்கு செல்வதாக தான் திட்டம் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்யும் கடும் மழையால் மலை பாதை சேதாராம் ஆகியிருக்கும் எனவே வாகனத்தில் அங்கு செல்ல இயலாது. அதனால் போளூர் வழியாக சவ்வாதுமலையில் ஏறுவது என்று முடிவு செய்து கிளம்பினோம். தம்பி புதிதாக ஊருக்கு வந்ததால் வழியில் பார்த்த சிறுசிறு குன்றுகள், குட்டிக் காடுகள், ஆள் இல்லாத நெடுஞ்சாலை, கருமேக நிழல் சூழ்ந்த வயல்வெளிகள் என அவன் பார்த்த அனைத்தும் அவன் உள்ளங்களை கவர தவறவில்லை, சென்னை வாசியான அவனுக்கு வழியில் சாப்பிட்ட 10ரூபாய் இளநீர் கூட ஆச்சரியத்தையே கொடுத்து இருந்தது.    ஒரு வாரமாக பெய்யும் மழையால் ஜவ்வாதுமலை எங்கும் பச்சை போர்த்தியது போன்று புற்கள் நீண்டு இருந்தது. அதிக உயரம் இல்லாத மல