Posts

Showing posts from January, 2023

ஜவ்வாதுமலை கானுலா - 14

Image
ஜவ்வாதுமலையின் 3000 ஆண்டு அதிசயம்      சில மாதங்களுக்கு முன் நானும் பங்காளி மதன் ஜவ்வாதுமலையில் கீழ்சிப்பிலி என்ற மலைகிராமத்தில் குள்ளர் குகை என அழைக்கப்படும் பெருங்கற்கால ஈமை சின்னங்களை பார்த்திருந்தோம்.     அந்த பயண அனுபவத்தை பற்றி திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ஒருங்கிணைப்பாளர் Bala  அண்ணனிடம் பேசும் போது, இந்த மலை முழுக்க இன்னும் நிறைய இடங்களில் இது போன்ற தொல் எச்சங்கள் நிறைந்து இருக்கு தம்பி என்று சொல்லியிருந்தார்.       ஆம், அவர் கூறியது மிகச்சரி. எப்போதும் போல் அல்லாமல் இம்முறை தனியாக ஜவ்வாதுமலைக்கு சென்றிருந்தேன். சூரிய உதயத்தை ஜவ்வாதுமலையின் மீது இருந்து பார்த்துவிட வேண்டி விடியற் காலை 5.30மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பினேன்.      மலைப்பாதை முழுக்க மூடுபனி அதிகமாக இருந்ததால் பொறுமையாகவே போக மூடிந்தது. மலைக்கு மேலே செல்வதற்குள் சூரிய ஒளிக்கதிர்கள் கிழக்கு திசை மலையின் உச்சியில் பட்டு பிரகாசிக்க தொடங்கி இருந்தது. ஆனால், அமிர்தி வனப்பகுதி அடுத்த ஆவாரன்வலசை பள்ளத்தாக்கு சூரிய வெளிச்சத்தை காண முடியாமல் இன்னுமும் பனியினுள் சூழ்ந்து இருந்தது. மெல்ல

துர்கம் கோட்டை

Image
பொங்கல் திருநாளில் புதிய  பயணம். நீண்ட நாட்களுக்கு முன், அண்ணா எனக்கு பனையோலையில் அம்பேத்கர் படம் செய்து கொடுங்க என தம்பி காத்து ஆசையோடு கேட்டிருந்தான். அவன் கேட்டு சில மாதங்கள் ஆகிவிட்டது, தொடர் வேலையில் அவன் கேட்டதை மறந்தே போனேன். கடந்த வாரம் தம்பி அழைப்பு கொடுத்து அண்ணா பொங்கல் திருநாளுக்கு ஊருக்கு போகிறேன் நீங்க அவசியம் இம்முறை எங்க ஊருக்கு வர வேணும் என கூப்பிட்டிருந்தான். அப்போது தான் அவன் பனையோலையில் அம்பேத்கர் படத்தை கேட்டது நினைவுக்கு வந்தது. சில மாதங்களுக்கு முன் அவனது ஊரில் அவன் முன்னெடுத்து வந்த குழந்தைகளுக்கான பாடசாலையில் சூழலியல் சார்ந்த உரையாடல் ஒன்றை செய்ய வேண்டும் என்று எனக்கும், அவனுக்கும் நீண்ட நாள் ஆசை இருந்தது. ஆனால் சில புல்லுருவிகளால் அவனது பாடசாலை சிதைக்கப்பட்டே விட்டது. ஆயினும் இந்தாண்டு தம்பியின் ஊரில் பொங்கலை கொண்டாடுவோம் என்று முடிவெடுத்து தம்பி ஆசையோடு கேட்ட பனையோலையில் புரட்சியாளர் படத்தை செய்து எடுத்துக்கொண்டு அவனது ஊருக்கு சென்றிருந்தேன். எங்கள் ஊரில் இருந்து 40 அல்லது 45கி.மீ தொலைவில் அவனது ஆர்பாக்கம் கிராமம் இருக்கும். தம்பியின் ஊருக்கு

ஜவ்வாதுமலை கானுலா - 13

Image
ஜவ்வாதுமலையின் மலையாளி பழங்குடி குழந்தைகளுடன் எப்போதாகினும் உரையாடும் வாய்ப்பு வரும், புதிதாக ஒரு அருவியை தேடிச்சென்ற எனக்கு அன்றைய நாள் குழந்தைகளுடனாக நாளாவே மாறிப்போனது. சிறு பிராயத்தில் இருந்து தினமும் பார்த்து பழகிய மலைகள் தான் என்றாலும், கொரானா தொடங்கிய காலத்தில் எதற்சையாக நண்பனோடு ஜவ்வாது காட்டிற்கு சென்றதில் இருந்து இப்போது வரையிலும் ஒவ்வொரு முறை காட்டிற்குள் செல்லும் போது இந்த காட்டின் ஏதோவொரு புதிய வசீகரத்தை உணர்ந்த வண்ணமே இருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக எனக்குள் ஏற்பட்ட மிக நீண்ட தனிமையின் நேரங்களை இந்த மலையும், காடுகளுமே என்னுடன் பகிர்ந்துகொள்கின்றன. சில மாதங்களுக்கு முன் ஜமுனாமரத்தூரில் உள்ள நம்ம குழந்தைகள் ஆசிரியர் மகாலட்சுமி அக்காவை அவரது வீட்டில் சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில், அக்காவின் இணையர் அன்பு மாமா ஆசிரியராக பணி செய்யும் "அம்மட்டங்கொல்லை" மலைகிராமத்தின் அருகில் காட்டிற்குள் ஒரு குட்டி அருவி இருப்பதாக சொல்லிருந்தார். ஜவ்வாதுமலையின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை ஓரளவுக்கு சுற்றித்திரிந்த எனக்கு அன்பு மாமா சொன்ன இடத்தை எப