Posts

Showing posts from 2021

ஜவ்வாது மலை கானுலா - 8

Image
ஜவ்வாதுமலை காட்டுப்பயணம் அண்ணனோடு      நான் கொல்லிமலைக்கு பயணம் செல்லும் போதே அரிதுல் அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது, டேய் தம்பி அண்ணாக்கும் உங்கூட காட்டுக்கு போகனுன்னு ஆசையா இருக்கு கூட்டிட்டு போடான்னு சொன்னாங்க. சரிங்க அண்ணா நான் கொல்லிமலை பயணம் போய்ட்டு வந்ததும் ஜவ்வாது மலைக்கு போலாம் - ன்னு சொல்லிருந்தேன்.      அண்ணா சொந்த ஊர் தஞ்சாவூருக்கு அருகில் கல்லூரி படித்தது சென்னையில் தான் ஆனாலும் சில காலம் மலேசியாவிலும், துபாயிலும் இருந்ததால் வடமாவட்ட ஊர்கள் அவருக்கு அவ்வளவு பரிட்சயம் கிடையாது. கொல்லிமலை பயணம் முடிச்சி ஊர் திரும்பும் போதே அண்ணாவுக்கு அழைப்பு கொடுத்து திருச்சியில் இருந்து வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி, போளூர் வந்துருங்கவும் என சொல்லிட்டு, நானும் கொல்லிமலையில் இருந்து கிளம்பி அன்றே இரவே செங்கம் வந்து சேர்ந்தேன். அவரும் இரவு 11மணி திருச்சியில், வேலூருக்கான பேருந்தில் ஏறிவிட்டதாக சொல்லிருந்தார். 6மணி நேரம் பயணம் என்பதால் அடுத்த நாள் அதிகாலையில் வந்து சேர்ந்துடுவாங்க என்பதால் கொல்லிமலைக்கு என்னோடு வந்த தம்பியின் வீட்டில் (செங்கம்) இரவு தங்கிவிட்டேன்.

ஒடுக்கப்படும் பனையேறிகள்

Image
தமிழக அரசின் காவல் துறையால் ஒடுக்கப்படும் பனையேறிகளும், பனை தொழிலாளர்களும்       ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்ற சொல்லை மெய்ப்பிக்கும் படியான சம்பவம் தான் சமீபத்தில் எங்கள் பகுதி பனையேறிகளுக்கு நடந்துள்ளது.      வட தமிழ்நாட்டில் பனையேறிகள் மிகுதியாக இருக்கும் கிராமம். ஒவ்வொரு ஆண்டும் 'கள்' இறக்க பனையேறிகள் காவல்துறையோடு பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியுள்ளது. காவல்துறையின் மிரட்டல்களை பொருட்படுத்தாமல் 'கள்' இறக்கும் பனையேறிகளின் மீது இன்று வரை விசச்சாராயம் இறக்கியதாகவே பொய் வழக்கு பதியப்படுகிறது. (தமிழகத்தின் பிற பகுதி பனையேறிகளுக்கும் இதே நிலை தான்). அரசு காவல் துறை மூலம் கடுமையான நெருக்கடிகளை கொடுத்தாலும், தங்களின் மரபு வழிப்பட்ட பனை தொழில் அவர்களால் நசுக்கப்பட்டாலும் பனையேறிகள் தத்தம் பனை சார்ந்த பணிகளை (கள் இறக்குவது உட்பட) அறத்தோடே செய்து வருகின்றனர்.       இவ்வளவு அடக்குமுறைகளுக்கு பின்னும் பறையேறிகள் மீண்டும் மீண்டும் பனைமரம் ஏறி கள் இறக்குவதாலும், பனை தொழிலை தொடர்வதாலும் இம்முறை நூதனமான முறையில் பனை மக்களை காவல் துறை ஒடுக்க ஆரம்பித்த

நானும் எங்கள் பட்டு நெசவும்

Image
           எங்கள் ஊரில் விவசாயமும், பட்டு நெசவும் தான் பிரதான தொழில்கள், அப்பா 8 வயது இருக்கும் போது கைத்தறி வேலை செய்யவும், விவசாயத்தை பார்த்துக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தார். தறியின் கால்குழி உயரம் கூட முழுமையாக அவருக்கு எட்டவில்லை ஆனாலும் தறி நெய்தார்(நெசவு). அப்போது தாத்தா தறி நெய்யாமல் ஊதாரியாக ஊர் சுற்றியதால், (பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன்) குடும்ப பொறுப்போடு தன் இரு தம்பிகளையும் சேர்த்து வளர்க்கும் பொறுப்பும் அப்பாவிடமே வந்தது.      அவர் தறி நெய்ய தொடங்கி தற்போது வரை தன் 50 ஆண்டு கால அனுபவத்தில் ஆரணி கைத்தறி பட்டு நெசவில் பலவிதமான பரிமாணங்களை பார்த்துவிட்டார். அப்பா, அம்மாவுக்கு திருமண ஆன போதும் சில வருடங்கள் கழித்து அக்கா பிறந்த பிறகு வரை அப்பா தறி நெசவு கூலிக்கு செய்வதில் இருந்து, சேலையை சொந்தமாக உற்பத்தி செய்யும் முதலாளியாக இருந்தார்.      அக்கா பிறந்த அடுத்து வருடத்தில் அண்ணாவும் அதற்கடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து நானும் பிறந்ததில் இருந்து அப்பாவுக்கு பட்டு சேலை தொழிலிலும், விவசாயத்திலும் தோய்வு ஏற்பட்டுள்ளது. இரு தொழில்கள் ஒரே நேரத்தில் வீழ்ச்சி அடைய பெரும் ப

அழியும் பேருயிர்

Image
அழியும் பேருயுர்      சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஈஷா யோக மையம் யானைகளின் வழிதடத்தை, வாழ்விடத்தை ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசின் முரணான பதில் பெரும் விமர்சனத்துக்கும், பேசு பொருளாகவும் ஆகியிருப்பதை நாம் அறிவோம்.     கோவை மாவட்ட வன அலுவலர் அளித்த பதிலில், ” ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையத்தால் வனப் பகுதியில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. வனப் பகுதியில் ஈஷா அறக்கட்டளை மற்றும் யோகா மையத்தால் கட்டிடங்கள் கட்டப்படவில்லை. யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யவில்லை ” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட யானைகளின் வழித்தடமோ, வாழ்விட பகுதியோ இல்லை எனவும் பதில் கொடுத்துள்ளனர்.      ஆனால் 17.8.2012-ல் கோவை மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு எழுதிய கடிதம் தான் ஈஷா யோக மைத்திற்கு எதிராக எழுதப்பட்ட முதல் புகார். அதில், ஈஷா யோக மையம் அமைந்துள்ள பகுதி யானைகளின் வழித்தட பகுதி என்றும், இந்த இடத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்களை கட்டியதால் யானைகள் மனிதர்கள் இடையேயான முரண்பாடு அதிகரித்து வ

ஜவ்வாதுமலை கானுலா - 12 (பகுதி 3)

Image
#ஜவ்வாதுமலை #கிழக்குதொடர்ச்சிமலை #கர்நாடககிரி_கோட்டை பகுதி 3:- மீண்டும் பழங்குடி குட்டி அண்ணா      முக்குத்தி கல் மலையை கடந்த பின் அடுத்து தெரியும் அந்த நெட்டு மலையை கடந்துவிட்டால் பிறகு கோட்டை வரை சமதளமான பாதை தான் என்றார் சங்கர். எனக்கும் ஒரு கட்டத்தில் எப்போ தான் நெங்குத்தான மலையேற்றம் இல்லாத சமதள மலை பாதை வருமோ என்றாயிற்று.       சங்கர் கை காட்டிய அந்த நெட்டுமலையை அடைந்த பின் வந்த வழியை திரும்பி பார்த்த போது மூக்குத்திகல் மலை தூரத்தில் இருந்து. அடிக்கடி நாய் குரைக்கும் சத்தமும், யாரோ விசில் அடித்து தன் இருப்பதை சொல்லுகிற சத்தமும் நாங்கள் முக்குத்திகல் மலையில் இருக்கும் போதே கேட்டது. சங்கரிடம் விசாரித்த போது சிரித்துக் கொண்டே சொன்னார் குட்டி அண்ணா மேல வந்துட்டாங்க என்று. நாங்கள் நான்கு மணி நேரமாக மலை ஏறிக்கொண்டு இருக்கிறோம், இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தால் தான் கோட்டைக்கு சென்று சேர முடியும். ஆனால் குட்டி அண்ணாவுக்கு நாங்கள் அழைப்பு கொடுத்து பேசும் போதே மணி மதியம் 12 ஆகியிருந்தது, கிட்ட தட்ட ஒன்னரை மணி நேரத்தில் அவர் கோட்டை வாசலுக்கு வந்துவிட்டார் அதுவும் சமையல

ஜவ்வாது மலை கானுலா - 12 (பகுதி 2)

Image
#ஜவ்வாதுமலை #கிழக்குதொடர்ச்சிமலை #கர்நாடககிரி_கோட்டை பகுதி 2:- மலையேற்றம் தொடங்கியது       பழங்குடி நண்பர் குட்டி சொன்ன சுற்றிக்கொண்டு செல்லும் இரண்டாம் வழியில் மலை ஏற முடிவு செய்து, நடக்க தொடங்கினோம். சில தூரம் தரைகாட்டில் நடை பயணம் முடிந்து, முழுமையான மலையேற்றம் ஆரம்பம் ஆனது.       பழங்குடி நண்பர் சங்கருடன் எல்லாரும் மலையேற தொடங்கும் போது மணி காலை 10ஆகியிருந்தது. குட்டியும் எங்களுடன் கொஞ்ச தூரம் வந்து எங்களை வழியனுப்பினார்.     மலை ஏற்றம் தொடங்கிய 30 நிமிடத்திலேயே ஊகித்து கொண்டேன், நிச்சயம் இந்த மலையேற்றம் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. உடன் மலையேறியோர் முகத்தில் அதற்குள் சோர்வு குடி கொண்டுவிட்டது, இத்தனைக்கும் நாங்கள் அடிவார மலையேற்றத்திலேயே தான் இருந்தோம். பிறகு சங்கர் எங்கள் ஆறு பேருக்கும் ஊன்றி நடக்க குச்சிகளை வெட்டி கொடுத்தார்.  மலையேற்றத்தில் முதல் அடையாளம் என்ற ஒரு பெரும் பாறை பரப்பிற்கு வந்து சேர்ந்தோம். இங்கு கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு செல்வோம் என்றார்.      சோர்வாக இருந்தாலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டாம் பிறகு மலையேற்றம் இன்னும் கடினமாக மாறிவி

தமிழர்களின் அடையாளம் பனை

Image
     தமிழர்களின் வாழ்விலும், வரலாற்றிலும் நீண்ட நெடிய அருபடாத மரபை க கொண்டது பனை மரம், இதன் உயரத்தை ப் போன்றே இதன் வரலாறும் நெடியது. சங்க காலம்முதல் சமகாலம்வரை பனையின் வகிபாகம் பெறுமதியானது. பன்நெடுங்காலமாக இந்த மொழியோடும், இந்த மக்களோடும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் மரம் பனை மரம். தமிழ் சமூகத்திற்கு அளப்பறிய பங்களிப்பை க் கொடுத்துள்ளது . பனைமரத்தை இன்று செங்கல் சூலைகளுக்காக வெறும் 50,100 ரூபாய்க்கு வெட்டப்படுவது தமிழினத்திற்கு பெரும் இழிவு. ஒரு சமூகத்தின் பண்பாட்டை முதுகில் சுமந்த ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தும் இழிநிலைக்கு இச்சமூகம் தள்ளப்பட்டுள்ளது வேதனையிலும் வேதனை.        தமிழகத்தில் சந்தனமரத்திற்கு இணையாக அதிக அளவில் ஒரு மரம் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது என்றால் அது பனைமரம்தான். பனை மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணிகள் இருப்பதாக என்னளவில் நான் உணர்கிறேன்.        முதல் காரணம் பண்பாட்டு ரீதியாக இம்மண்ணின் அடையாளங்களைத் திட்டமிட்டு அழிக்க முற்படுவது தான். இதை நாம் ஆழமாக அவதானிக்க வேண்டும், சூழலியல் குறித்த பறந்த பார்வை உள்ளவர்களால் நிச்சயம

ஜவ்வாதுமலை கானுலா - 12

Image
#ஜவ்வாதுமலை #கிழக்குதொடர்ச்சிமலை #கர்நாடககிரி_கோட்டை பகுதி 1 : முதல் நாள் மலையேற்றம்     ஜவ்வாதுமலையின் 3000 அடி உயரத்தில் கிட்டதட்ட 15கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மிக பிரம்மாண்டமான கோட்டையை தேடிய பயணம்.      ஓராண்டுக்கு முன் ஜவ்வாதுமலையின் படைவீடு வனப்பகுதிக்கு மேற்கே 15கி.மீ தொலைவில் இருக்கும் கோட்டைமலை கோவிலுக்கு சென்ற போது அறிமுகமானார் நண்பர் Anbarasan நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து ஊர் என பேசும்போது தெரிந்தது, அன்றில் இருந்து ஜவ்வாதுமலை அல்லது பெரும்பாலும் எந்த மலைபயணமாக இருந்தாலும் அவர் எனக்கும் நான் அவருக்கும் தகவலை முன்கூட்டியே சொல்லி உடன் செல்வோம்.      கடந்த ஆண்டு எங்கள் ஊருக்கு வடக்கே 10கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூசிமலைகுப்பம் காட்டில் உள்ள சமணர் கற்படுககைகளை பார்க்க ஒன்றாக சென்றிருந்தோம், அதன் பின் தொடர் வேலைகளால் இருவரும் ஒருங்கே சொல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது, நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை (28.08.21) அவரின் பயண நண்பர்களோடு ஜவ்வாதுமலையில் இருக்கும் ஒரு பழங்கால கோட்டையை பார்க்க போகிறோம் நேரம் இருந்தால் உடன் இணைந்து கொள்ளுங்க என சொல்லிருந்தார்

ஜவ்வாதுமலை கானுலா - 11 (பகுதி 2)

Image
ஜவ்வாதுமலை கானுலா - இரண்டாம் நாள் "ஆசியாவின் பெரிய (நீர்மத்தி) அடி மரமும் - பெருங்கற்கால ஈமை சின்னங்களும்"        நேற்று இரவு முழுவதும் பெய்த கடும் மழையில் எங்கள் கூடாரம் ஏறக்குறைய தண்ணீரில் மிதந்து கொண்டு தான் இருந்தது. கடுமையான குளிரால் இரவு சில மணி நேரமே தூங்க முடிந்தது. அதிகாலையில் மீண்டும் அருவிக்கு சென்று அங்கிருந்து சூரிய உதயத்தை பார்க்கலாம் என இரவு திட்டமிட்டு இருந்தோம் ஆனால் இரவு பெய்த கடும் மழையாலும், மேகமூட்டத்தாலும் அருவிக்கு செல்வது சாத்தியமில்லை. மேலும் குளிர் நடுக்கத்தில் இருந்து மீளமுடியாமல் எல்லோரும் காலையில் எழுந்து கொள்ளவே 8மணிக்கு மேல் ஆனது, தோழி சாரு மலை கிராமத்தில் யார் வீட்டிலோ இருந்து கொண்டு வந்த கருப்பட்டி காபி அந்த குளிருக்கு இதமான சூட்டை கொடுத்தது.      நேற்று வாகன பழுது பார்த்துக் கொண்டு வந்த நண்பர் சதிஷ் அந்த மலை கிராமத்திற்கு வந்து சேர்ந்த போது ஊர் மக்களிடம் தங்குவதற்கான இடமும்,  மாற்று பாதுகாப்பு ஏற்பாடும் பேசி வைத்திருந்தார். நேற்று அவர் கிராமத்திற்கு வந்து சேர்ந்ததும் எங்களை காண அருவி வழியே இரண்டு மூன்று முறை வந்து பார்த்துள்ளார்,

ஜவ்வாதுமலை கானுலா - 11

Image
ஜவ்வாதுமலை கானுலா - முதல் நாள் "தேனருவியும் - நீண்ட மழை இரவும்"      கொரானா இரண்டாம் அலை ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என கடந்த 6மாத காலமாக காட்டுப்பயணமோ, மலையேற்றமோ இல்லாமல் வெறுமையாக இருந்த போது தான் Karthi KN இருந்து அழைப்பு வந்தது, சகோ இந்த வர இறுதியில் நண்பர்களோடு ஜவ்வாதுமலைக்கு வர திட்டம் இருக்கு நீங்களும் வரீங்களான்னு கேட்டதும் இதற்காக தானே காத்திருக்கோம்ன்னு உடனே சரின்னு சொல்லிட்டே.      ஜவ்வாது மலையில் எங்கு செல்லப்போகிறோம். என்ன என்ன பார்க்கப்போகிறோம். இரவு மலையில் எங்கு தங்க போகிறோம் என்பதெல்லாம் முன்னமே பேசி முடிவு செய்துவிட்டோம்.      சனிக்கிழமை காலை 10மணிக்குள் ஆரணி வந்த பின் அங்கிருந்து எல்லோரும் ஒன்றாக போளூர் வழியாக மலைக்கு செல்ல திட்டம் இருந்தது, வழக்கம் போல் வெள்ளி இரவு பணி முடித்துவிட்டு சனி கிழமை காலையில் மலைக்கு செல்ல தயாராக இருந்த போது கார்த்தி அழைப்பு, சகோ உடன் வந்தவங்க வழி மாறி போய்டாங்க, நீங்க நேரா போளூர் வந்துடுங்க நாங்க எல்லாரும் அங்க வந்து விடுகிறோம் என்றான்,  நானும் போளூர் சென்று காத்திருந்தேன். நீண்ட காத்திருப்புக்கு பின் கார்த்திக் உடன் தங