Posts

Showing posts from August, 2019

இயற்கையின் முதல் எதிரி மனிதன்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் - காடும் உடைய தரண் ஒரு நாட்டிற்கு அரணாக எது இருக்க முடியும் என்பதை பற்றிய வள்ளுவனின் கூற்று தான் இக்குறள், ஆனால் இன்றைய இயந்திர மனிதர்களாகிய நாம் இயற்கையை எவ்விதம் காண்கிறோமோ அவ்வாறே அதன் தோற்றத்தையும், அதனுடைய பயன்களையும் நம் மனக்கண்ணில் புதைத்து வைத்து கொள்கிறோம். இதை ஐயா நம்மாழ்வார் பின் வருமாறு குறிப்பிடுகிறார், ஒரு ஆசாரி மரத்தை பார்க்கும் போது இது நாற்காலிக்கு ஆகுமா, கலப்பைக்கு ஆகுமானு பார்க்குராரு, ஒரு வியாபாரி மரத்தை பார்க்கும் போது இது விறகுக்கு ஆகுமா, சட்டத்துக்கு ஆகுமானு பார்க்குராரு, ஒரு விவசாயி மரத்தை பார்க்கும் போது மரத்தோட இலைகளை கால்நடைகளுக்கு தீவனம் போடலாமா, பழத்த எடுக்கலாமான்னு பார்க்குராரு,  அந்த மரத்தோட பட்டுபோன குச்சிகளை விறகுக்கு ஆகுமானு இன்னொரு குழந்தை பார்க்குது, இப்படி அவரவர் சூழலுக்கேற்ப மரங்களை தங்களுக்கான பொருளாக காண்கின்றனர், இயற்கையை பற்றியோ மரங்களை பற்றியோ மனிதனின் இத்தகைய சிந்தனை என்பது எப்போதும் ஒரே மாதிரி இருந்ததில்லை, மாறாக மனித இனத்தின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் இயற்கையை பல்வேறு வடிவங்களில் அ

கடற்கரையில் ஏன் பனை

        பனை மரம் பொதுவாக நெய்தல் நிலத்திற்கே உரிய மரம் என்றாலும் தமிழக மெங்கும் பல்வேறு நிலப்பகுதிகளில் பனை வளர்ந்து இருப்பதை நாம் காண முடியும், குறிப்பாக கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரங்களிலும், சதுப்பு நிலப்பகுதியிலும், தேரிக்காடுகளிலும் பனை மரங்கள் இருக்கின்றன . மேலும் பனை மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 500 முதல் 800 மீட்டர் உயரம் வரை தடையின்றி வளர்கின்றன .   பனையின் வளர்ச்சி தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தை தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருப்பினும் கடற்கரை பகுதியில் நாம் பனை நடவை மேற்க்கொள்வதற்கான காரணமும் நாம் தான், நாம் உருவாக்கி வைத்த பேரழிவு திட்டங்களால் இன்று இந்தியவின் கடற்கரைகள் மிகவும் அபாய கட்டத்தில் இருக்கின்றன , ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பேரிடர் இழப்புகளே சாட்சியம், பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்த கடற்கரைகள் இன்று அதன் சமநிலையை இழக்க தொடங்கியுள்ளன . ( கடுமையான கடல் சீற்றத்தால் காணாமல் ஆக்கப்பட்ட தனுஸ்கோடியின் இன்றைய நிலையே சிறந்த உதாரணம்) முதலில் கடற்கரைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த

பனையும் புறம்போக்கும்

           இயற்கையை நாம் எவ்வாறு காண்கிறோமோ அவ்வாறே அதன் தோற்றமும் பயனும் நம்மில் புதைந்து விடுகிறது. அவ்வாறாக பனையை வெறும் மரமாக மட்டுமே பார்க்கும் பார்வையை சற்று விளக்கி பார்த்தால் தான் அதன் சூழலியல் கட்டமைப்பு புலப்படும். மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் - காடும் உடைய தரண் எனும் குறளின் அர்த்தம் யாதெனில்:- தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே ஒரு நாட்டின் அரண்களாகும். ஏறக்குறைய இந்த குறளின் மையக்கருத்துடன் ஒத்துப்போவது தான் பனை. பனை மரம் என்றும் இம்மண்ணுக்கான அரண் தான், அது நீர் மேலாண்மையிலும் சரி, தரிசு நிலங்களிலும் சரி, பனை காடுகளிலும் சரி அது அரணாக இருந்து இம்மண்ணையும் மக்களையும் காக்கிறது. எல்லாவற்றிலும் மேலாக நீர் தான் உலகில் வாழும் அத்துனை உயிர்களுக்கும் அடிப்படை ஆதாராமாக இருப்பது. ஆகையால் தான் உண்ணாவிரதம் இருப்பவர்கள் கூட தண்ணீர் அருந்தி கொள்கின்றனர், மனித முயற்சியால் அல்லது அறிவியலால் ஒருபோதும் உற்பத்தி செய்ய முடியாத வளம் தான் நீர், அப்படியான முக்கியத்துவம் வாய்ந்த நீரை வியாபார வணிகமாக்கும் அறிவை தான் மனித இனம்