இயற்கையின் முதல் எதிரி மனிதன்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் - காடும் உடைய தரண்

ஒரு நாட்டிற்கு அரணாக எது இருக்க முடியும் என்பதை பற்றிய வள்ளுவனின் கூற்று தான் இக்குறள், ஆனால் இன்றைய இயந்திர மனிதர்களாகிய நாம் இயற்கையை எவ்விதம் காண்கிறோமோ அவ்வாறே அதன் தோற்றத்தையும், அதனுடைய பயன்களையும் நம் மனக்கண்ணில் புதைத்து வைத்து கொள்கிறோம். இதை ஐயா நம்மாழ்வார் பின் வருமாறு குறிப்பிடுகிறார், ஒரு ஆசாரி மரத்தை பார்க்கும் போது இது நாற்காலிக்கு ஆகுமா, கலப்பைக்கு ஆகுமானு பார்க்குராரு, ஒரு வியாபாரி மரத்தை பார்க்கும் போது இது விறகுக்கு ஆகுமா, சட்டத்துக்கு ஆகுமானு பார்க்குராரு, ஒரு விவசாயி மரத்தை பார்க்கும் போது மரத்தோட இலைகளை கால்நடைகளுக்கு தீவனம் போடலாமா, பழத்த எடுக்கலாமான்னு பார்க்குராரு,  அந்த மரத்தோட பட்டுபோன குச்சிகளை விறகுக்கு ஆகுமானு இன்னொரு குழந்தை பார்க்குது, இப்படி அவரவர் சூழலுக்கேற்ப மரங்களை தங்களுக்கான பொருளாக காண்கின்றனர், இயற்கையை பற்றியோ மரங்களை பற்றியோ மனிதனின் இத்தகைய சிந்தனை என்பது எப்போதும் ஒரே மாதிரி இருந்ததில்லை, மாறாக மனித இனத்தின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் இயற்கையை பல்வேறு வடிவங்களில் அவன் கண்டுள்ளான், வாருங்கள் காலத்தோடு பயணித்து அவனின் பரிணாம வளர்ச்சியை காண்போம்.

இயற்கை படைப்பு:-

  உலகம் உருவாக காரணமான அண்ட வெடிப்புக்கு பின் இப்பூமி நெருப்பு கோளமாகவே இருந்தது காலபோக்கில் அது குளிர்ந்து பனிப்பாறைகள் உருவானது, பனியுகத்திற்கு பின் ஒவ்வொரு படிநிலையிலும் பூமியில் ஏற்பட்ட அழுத்த மாறுதல்களால் நீர் என்ற கருப்பொருள் உருவாகிருக்கலாம், பிறகு தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் கடைசியாக மனிதன் என பல்வேறு உயிரிகள் கால சூழ்நிலைக்கேற்ப உருவாகி அவைகள் தொடர்ந்து ஒவ்வொரு நிலையிலும் பரிணமித்து கொண்டே இருந்தன.

அவ்வாறு பரிணமித்த உயிர்கள் உயிர்வாழ்வதற்கு நீர் இன்றியமையாத வளமாக இருந்து வருகிறது. மனிதன் வேட்டை சமூகமாக இருந்த காலம் தொட்டு நீரையும், நெருப்பையும் படைப்பு கடவுளாவே பாவித்துள்ளான். ஆனால் காலங்கள் உருண்டோடின,  வேட்டை சமூகமாக இருந்த மனிதன் காடுகளில் இருந்து விலங்குகளை துரத்தும் போது சமவெளிகளை காண்கிறான், அங்கு இயற்கையாக விளைந்த பயிர்களை காண்கிறான், அவைகள் உண்ண தகுந்ததாக இருந்தமையால் அவற்றை திரும்ப பயிர் செய்யும் முறையை கற்றுக்கொள்கிறான். உணவுக்காக பயிர் செய்யப்பட்ட அந்த தாவரங்களுக்கு நீர் தேவைப்பட்டது அதற்காக நதிகளை நோக்கி படையெடுக்கிறான், அங்கு அபரிவிதமாண நீர் கிடைத்தமையால் உணவு உற்பத்தி முறை உருவாகிறது, அந்தந்த நதிகரைகளில் சமூகமாக வாழ்தல் நடக்கிறது, ஆரம்ப காலத்தில் அந்த கூட்டத்தை பெண் தான் வழிநடத்தவும் தலைமை தாங்கவும் செய்கிறாள், அவள் தனக்கான இணையை தானே தேர்வும் செய்து கொள்கிறாள், ஆண்கள் வேட்டையாடிய அல்லது உற்பத்தி செய்த உணவை அந்த சிறு கூட்டத்திற்கு சமமாக  உணவு பகிர்ந்து கொள்ளப்படுகிறது, காலபொக்கில் அவர்கள் பெரும் மழை வெள்ளதையும், புயல்களையும், சூறாவளிகளையும், கடுமையான வெப்பத்தையும் காண்கிறார்கள், அவைகளிடம் இருந்து தம்மை பாதுகாக்க அவற்றை இயற்கை கடவுளாக வணங்க ஆரம்பிக்கின்றனர், ( தற்போதும் காடுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு இயற்கை தான் பிரதான கடவுளாக இருந்து வருகிறது) இந்த பிணைப்பு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டு தான் இருந்தது, அப்போது வரை இயற்கை மீது அவர்கள் கொண்ட அளவற்ற காதலினால் இயற்கை சூழலில் பெரிய மாறுதல்கள் இன்றி வாழ்ந்து வந்தனர்.

காடுகளை விட்டு சமவெளிகளில் வாழ்ந்த மனிதனுக்கான, உணவு தேவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வந்தது, அதற்காக அவன் எளிமையாக கிடைக்கும் தாவரங்களை திரும்ப பயிர் செய்ய பழகிக்கொண்டான், கற்காலம் முடிந்து இரும்பு காலம் தொடங்கிய பிறகு உலகம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட போகிறது என்பதை அப்போதிய மனிதன் அறிந்திருக்க வாய்ப்பில்லை, தன்னை  பாதுகாத்து கொள்ள பல ஆயுதங்களை கண்டுபிடிக்கிறான் அவைகளை கொண்டு வரம்பட்ற வேட்டைகள் நிகழ்கிறது, கால்நடைகள் வளர்ப்பு பிராணிகளாக வளர்க்கப்படுகிறது, அவைகளை மேய்க்கும் சமூகம் நாடோடியாக பல கண்டங்களுக்கும் பயணமாகிறது, இப்படி நாடோடியாக சென்றவர்களின் கூட்டத்தில் ஆண்கள் தான் அதிகம் இருந்தனர் பெண்கள் குறைவான அளவில் அல்லது அறவே இல்லை எனலாம், நாடற்றவர்களாக இருந்த அவர்கள் மத்திய ஐரோப்பா பகுதிகளில் இருந்து கடைசியாக சென்ற இடம் தான் இன்றைய இந்திய தீபகற்பம், பல்வேறு இனக்குழுக்கள் ஒன்றாகவும், நகர நாகரீகத்தோடும் வாழ்ந்து கொண்டிருந்த அந்த இனக்குழுக்களுக்குள் கலகங்களை ஏற்படுத்தி தம் இருப்பை தக்கவைத்துக் கொண்டனர் அந்த நாடோடிகள், சண்டையிட்டு பிரிந்த ஒவ்வொரு இனக்குழுவையும் இன்ன பிற சிறு, சிறு குழுவையும் சூழ்ச்சி வலையினுள் சிக்க வைத்து தனக்கான அதிகாரத்தையும் உறுதி செய்து கொண்டனர், இது போன்ற இன அழிப்பென்பது உலகம் முழுக்க நடந்தேரியது, குறிப்பாக கொலம்பஸ் அமெரிக்காவில் தடம்பதித்த போது அங்கிருந்த செவ்விந்தியர்களை நர வேட்டையாடியது பற்றிய அவனது கடல்குறிப்புகளே தெரிவிக்கின்றன, (நாங்கள் கொன்று போட்ட பிணங்களை திண்ண வந்த கழுகுகள் பகலை இரவாக்கின), இப்படி மனித பரிமாணம் ஆரம்ப காலத்தில் தன் சக இனத்தை அழித்தே அதன் அதிகாரத்தை பூமி பந்து முழுக்க பரலாக்கியது.

நவீன மனிதனின் வருகை:-

சமூகமாக வாழ்ந்த மனிதனுக்கு பொருளாதாரம் தேவையில்லாத காரணியாக இருந்தது, ஆனால் அதிகார வேட்கை கொண்ட நவீன மனிதன் உலகில் உள்ள அனைத்து செல்வங்கலும் தனக்கானதாக மாற்ற முயன்றான், சகமனிதனை அடிமைகளாக்கி அவர்களின் வேர்வையை உறிஞ்சி அவன் வயிற்றை வளர்த்து கொண்டு வந்தான், பொருளாதாரமற்ற, அதிகாரமற்ற அந்த மக்கள் இதற்கு மேலும் வாழமுடியாது என்ற நிலையில் அதிகார வர்க்கங்களை நோக்கி கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர், அந்த மக்களை ஒருங்கிணைத்து அல்லது அவர்களின் விடுதலை தீயை துவைக்கி வைக்க சிறய தீ கீற்றுகளே தேவைப்பட்டது, உலக வரலாற்றில் மனித இனத்தை பேரிருள் சூழும் போது எல்லாம் அந்த பேரிருளை போக்கும் தீப்பிழம்மாக சில தலைவர்கள் உருவாகினர், அவர்களின் வருகை தான் முதலாளித்துவம் உருவாக்கி வைத்த மாய விலங்கை உடைத்து மக்களுக்கு சுதந்திர உலகை படைக்கும் ஆற்றல் கொடுத்தது, அதனால் ஒன்றுபட்ட உழைக்கும் மக்களின் கனவு தேசம் உருவாகியது, ஆனால் முதலாளித்துவம் சுதாரித்துக் கொண்டது அதிகார பகிர்வு என்ற மற்றொரு மாய உலகத்திற்குள் மக்களை மடை மாற்றியது, அதனால் பேராசை கொண்ட மக்கள் சிலர் அதிகார வர்கத்தின் உடன் சேர்ந்து இயற்கை பேரழிவுகளை உருவாக்குபவர்களாக ஆகிபோயினர், நிலவளமும், நீர்வளமும், காடுகளும், மலைகளும் (இப்போது கடலும்) நம் கற்பனைக்கும் எட்டாத வைகையில் சுரண்டப்பட்டு அழிவுகளை சந்திக்க நேரிட்டது, கற்கால மனிதன் தனக்கான உணவை உற்பத்தி செய்யும் போதே அழிவுகள் தொடங்கிற்று ஆனால் அப்போது அவன் இயற்கையோடு இசைந்து வாழ்ததால் பெரிய மாறுதல்களோ, பாதிப்புகளோ ஏற்படாமல் இருந்தது, ஆனால் இன்றோ மனித இனம் தன் வியாபார பசிக்காக அனைத்து இயற்கை வளங்களையும் நரவேட்டை ஆடிக்கொண்டிருக்கிறது, உலகின் வடதுருவமும், தென்துருவமும் மிக வேகமாக உருகிவருகின்றன, உலகின் சூழலியலை பாதுகாக்கும் அமேசான் காட்டிலோ ஒவ்வொரு நொடிக்கும் ஒரு கால்பந்து மைதான அளவிற்கு காடழிப்பு கடக்கிறது, கிரின்லாந்தின் ஒட்டமொத்த பனிப்பாறைகளும் தன் கடினத்தமையை இழந்து எந்நேரமும் உருகிபோகலாம் என்ற சூழலில் உள்ளது, இந்தியாவை பொருத்தவரை இங்கு கிட்டத்தட்ட 100 கோடி மக்களின் உயிர் ஆதாரமாக இருப்பது இமாயலை மலைத்தொடரும், மேற்குத்தொடர்ச்சி மலையும், உதாரணமாக நம் குழந்தைகளிடம் கங்கை, யமுனை,  பிரம்மபுத்திரா போன்ற ஆறுகள் எவ்வாறு உருவாகிறது என்பதை கேட்டால் அழகாக சொல்லிவிடுவர் பனி மலைகள் உருகி ஆறாக வருகிறது என்று, ஆனால் பனிமலைகளே இல்லாத மேற்கு தொடர்ச்சி மலையில் தீபகற்ப இந்தியாவின் நதிகள் எவ்விதம் உற்பத்தி ஆகிறது என்றால் அவர்களிடம் விடை இருக்காது ஏனெனில் நம் பாடத்திட்டம் அதை பற்றி சொல்லாது, உண்மையில் தீபகற்ப இந்தியாவில் வாழும் மக்களுக்கு தம் அம்மாவை விட மேலானது ஒன்று உள்ளதெனில் அது மேற்கு தொடர்ச்சி மலைதான், உலக யுனெஸ்க்கோ நிறுவனத்தால் பாதுகாக்கபட்ட பழமை வாய்ந்த மலை தொடராக மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது, அத்தகைய பெருமை மிகுந்த அந்த மலைத்தொடர் இன்று கொஞ்சம் கொஞ்சமாக கற்ப்பழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது, மழைக்காடுகளின் அழிவு, புல்வெளிக்காடுகளின் அழிவு, மலையின் மீது வரம்பற்ற கட்டுமானங்கள் சொகுசு விடுதிகள் என நிரம்பி உள்ளதால் அது தன் பாரம்பரியமான உயிர் தன்மையை இழந்து வருகிறது, நாம் இப்போதே செயல்பட்டாக வேண்டும் இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்குள் நாம் இப்போது இழந்ததை விட 100மடங்கு அதிக இயற்கை வளத்தை நாம் இழந்து இருப்போம், உலகில் மனித நேயம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இக்கால இளைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நாம் உயிர்நேயம் பற்றி இலக்கியங்கள் படைத்துள்ளோம் என்று, ஒரு மரத்தில் இருந்து கிடைக்கும் இலைகளை பயன்படுத்து என் நோயை குணபடுத்த முடியும் என்றால் குணப்படுத்து அல்லது அந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பழங்களை பயன்படுத்தி எனக்கு உணவு அளிக்க முடியும் என்றால் உணவளி ஆனால் அந்த மரத்தை வெட்டித்தான் என்னை வாழ வைக்க முடியும் என்றால் என்னை சாக விடு மரத்தை வாழுவிடு என்பதை தான் நம் மரபு சார்ந்த பார்வையாக இருந்து, இறுதியாக நாம் சொல்லிக் கொள்வது நாம் பிறந்த இந்த மண்ணை நேசிக்காது இம்மண்ணுக்கான அரசியல் செய்யாது அதில் ஓர் உயிராக இருக்கிற மனிதனை வாழ வைக்க முடியாது என்பதே நிதர்சனம். நாம் சுவாசிக்கும் காற்றும் நாம் பயன்படுத்தும் நீரும் நாம் சம்பாதித்த சொத்தல்ல நாம் ஏகதிற்கும் செலவு செய்ய, அவைகள் நம் தாத்தா பாட்டிகள் நமக்கு கொடுத்த கடன் அவற்றை வட்டியும் அசலுமாக நாம் அடுத்த தலைமுறைக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் ஏந்துவோம் இயற்கையை பல்லுயிர் சூழலை பாதுகாப்போம்.

பனைசதிஷ்
9994969088

Comments

  1. நல்ல கருத்து...இதில் எழுதப்பட்டவை அனைத்தும் நிறைய பதிவுகளில் உள்ளது.

    ReplyDelete
  2. மிக்க நன்றி பிரகாசித்தா, தொடர்ந்து பயணிப்போம்

    ReplyDelete
  3. வரிகள் ஒவ்வொன்றும் அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்