Posts

Showing posts from January, 2021

பனங்கள் தொன்மை பகுதி 2

Image
கள்ளின் தொன்மை பனை மரங்களிலிருந்து இறக்கிய கள்ளைச் சேகரித்து ஒரே இடத்தில் விற்கும் முறை தமிழகத்தில் பழமையான ஒன்றாகும். சங்க நூல்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சி மதுரை நகரின் அங்காடித் தெருக்களை வருணிக்கும் போது கள் விற்கும் கடையையும் வருணிக்கிறது. கள் விற்கும் கடை என்பதை அடையாளம் காட்டும் வகையில் கடையின் மீது கொடிகள் பறந்து கொண்டிருந்ததை, 'கள்ளின் களிநவில் கொடியொடு' (372) என்று குறிப்பிடுகிறது பதிற்றுப்பத்திலும் (58:9-11) 'கள் கொடி நுடங்கும் (அசையும்) ஆவணம் புக்கு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது (ஆவணம் என்றால் கடைத்தெரு). இங்கு கள் குடிப்போர் காரம் மிகுந்த இஞ்சி அல்லது புளிச்சுவை கொண்ட பழங்களைத் தொடுகறிபோல் பயன்படுத்தியுள்ளனர். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், தான் நடத்திய போரில் வெற்றி பெற்றதும், கூத்தர்களுக்குக் கொடையாகக் கள் நிரம்பிய குடங்களை வழங்கினான். இச்செய்தியை, பரணர் என்ற கவிஞர் (பதிற்றுப்பத்து 42:10 -13) இஞ்சிவி விராய பைந்தார் பூட்டிச் சாந்து புறத்து எறிந்த தகம்பு துளங்கு தீம் சேறு விளைந்த மணிநிற மட்டம் ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்த என்று வருணித்துக் கூறுகி

பனங்கள் தொன்மை

Image
கள்ளின் தொன்மை #பனங்கள் தமிழர்களின் பாரம்பரியமான மதுவாகும். "தீம்பிழி' என்ற சொல்லால் சங்க இலக்கியங்கள் கள்ளைக் குறிப்பிடுகின்றன 'இரும்பனம் தீம்பிழி' என்று நற்றிணையும்(38:3),  'பிணர்ப் பெண்ணைப்பிழி' என்று பட்டினப்பாலையும் (வரி. 89)  'பழம்படுதேறல்' என்று சிறுபாண் ஆற்றுப்படையும் (வரி. 58) கள்ளை அழைக்கின்றன. மற்றொரு பக்கம் கடுங்கள் (புறம். 68:15) இன்கடுங்கள்' (புற, 80:1, நற் 10:5, குறு, 298: 5. அகம். 76: 3) என்ற சொல்லாட்சிகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் கொடுமணலில் நடந்த அகழ்வாய்வில் மட்பாண்டங்கள், தாழிகள் என்பன முழுமையாகவோ உடைந்த பகுதிகளாகவோ கிடைத்துள்ளன. இவற்றில் தமி(ழ் பிராமி)ழி எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. இது குறித்து சுப்பராயலு (2008:191) இந்த எழுத்துப் பொறிப்புகள் எல்லாமே கலங்கள் சுட்டபின் இடப்பட்டவை. ஆகவே மண்கலையங்களைச் செய்த குயவர்கள் இவற்றைப் பொறிக்கவில்லை. யாவும் அவற்றைப் பயன்படுத்தியவர்களால் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பொறிப்புகள் பலருடைய கைகளால் செய்யப்பட்டவை என்பது இவ்வெழுத்துக்களை மேலோட்டமா