உலக காடுகள் தினம்


* காடு, மிகவும் தூய்மையான இடம் மட்டும் அல்ல; மனித இதயத்துக்கு மிக நெருக்கமான இடமும் கூட. ஒருவனுக்குள் இருக்கும் உண்மைகளை எளிதில் உதிர்க்கச் செய்யும் ஆற்றல் காட்டுக்கு உண்டு. காட்டின் ஊடே செல்லும் ஒருவனால் கபடத்தனத்தை மறைத்து பயணப்பட முடியாது.

* காடு என்பது அடர்ந்த தாவர கூட்டம் மட்டும் அல்ல, அது சிறு சிறு பூச்சிகளில் இருந்து யானைகள் வரை இருக்கக்கூடிய ஒரு பெரும் பல்லுயிரிய தொழில்கூடம்.

* உலகில் மனித ஆக்கிரமிப்புகள் அதி வேகமாக நடக்கும் நிலம் காட்டின் நிலமாகவே இருக்கிறது. 

*உலகில் மனிதர்களால்  அதிகமாக அழித்தொழிக்கப்படும் உயிரிகள் காட்டுயிரிகளாக தான் இருக்கின்றன.

* உலகில் பல்லுயிர்மைக்கு பெரும் ஆதாரமாக விளங்கும் காடுகளை மனித இனத்தை தவிர எந்த ஒன்று இவ்வளவு வேகமாக அழித்தது இல்லை. 

* நாம் நினைப்பதை காட்டிலும் காடு எண்ணிலடங்கா உயிராற்றலை கொண்டது, மனிதனின் அறிவை மட்டும் வைத்துக்கொண்டு காட்டை உள்வாங்குவதோ, உணர்வதோ சாத்தியம் இல்லை.
* இங்கு நாம் குப்பைகளை தரம் பிரிக்க அல்லது சுத்தம் செய்ய பெரும் மனித ஆற்றலையோம், பெரும் பொருளாதாரத்தையும் செலவிட வேண்டியுள்ளது, ஆனால் காட்டில் ஒரு விலங்கு இறந்து போனால் அவை அங்கம் அங்கமாக தரம் பிரிக்கப்பட்டு மிக விரைவாக காட்டுயிரிகளால் சுத்தம் செய்யப்படுகிறது.

* நமக்கு தேவையான பொருளாதார வளத்தை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காடுகள் வழங்கி கொண்டே தான் இருக்கின்றன. அது ஒரு தாய் குழந்தைக்கு பால் ஊட்டுவது போன்றது. ஆனால் மனிதர்களோ அந்த தாயின் மார்பை அறுவிட்டு ரத்தத்தை குடித்து கொண்டிருக்கின்றனர்.

* சமவெளி நிலங்களில் வாழும் மனிதர்களை காட்டிலும் காடுகளில் வாழும் பழங்குடிகள் தங்கள் காட்டை, காட்டில் வாழும் உயிர்களை தம் காவல் தெய்வங்களாகவே பாவித்து அவற்றை பாதுகாத்து வருகின்றனர். 

* உலகின் பல்வேறு காடுகள் ஏதேனும் ஒரு வகையில் பாதுகாப்பாக இருக்கிறது என்றால் அவை அங்கு வாழும் பழங்குடிகளால் மட்டுமே சாத்தியமாகிறது.
* உலகின் உயிராற்றலை சமன் செய்வதில் காடுகளுக்கே முதன்மையான பங்குண்டு.

* உலகின் மிகப்பழமையான காடுகளும், உலக உயிர்காற்றின் நுரையீரலுமான அமோசான், போர்னியா காடுகள் அவைகள் உருவாக எடுத்துக்கொண்ட காலத்தை காட்டிலும் அதிவேகமாக அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அமோசான் காட்டில் மட்டும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக இரண்டு கால்பந்து மைதானம் அளவில் காடுகள் அழிக்கப்படுகிறது.

* காடுகள் யாவும் நாம் சம்பாதித்த சொத்து கிடையாது, அவை நம் தாத்தா, பாட்டிகள் நம்மிடம் கொடுத்து வைத்த கடன், அவற்றை வட்டியும் மொதலுமாக அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

* படங்கள்: ஜவ்வாதுமலை காடு

Comments

  1. Home sapiens is the last evolution creature and taken everything as granted

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்