"அழிவின் விளிம்பில் அதிசய கிளைப்பனை"

     இரண்டு ஆண்டுக்கு முன் ஐயா இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய "பனைமரம்" புத்தகத்தை வாசித்த போது அதில் வேலூருக்கு அருகில் செதுவாலை என்ற கிராமத்தில் ஏழுகிளை கொண்ட பனைமரம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அதை படித்ததும் அந்த கிளைப்பனையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நண்பனை அழைத்துக்கொண்டு அந்த அதிசய கிளைப்பனையை நேரில் பார்க்க சென்றிருந்தோம்.
    பலரிடம் வழி கேட்டு கடைசியாக அவ்விடம் சென்று சேர்ந்த போது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்த புத்தகத்தில் ஏழு கிளைகள் என குறிப்பிட்டு இருந்தது. ஆனால்  நாங்கள் அங்கு சென்று பார்த்த போது அந்த பனைமரத்தில் ஆறு கிளைகள் மட்டுமே இருந்தது.

    ஒரு கிளை காற்றில் முறிந்து அருகில் விழுந்து கிடந்தது, மேலும் ஒவ்வொரு கிளையும் அருகில் இருக்கும் மற்ற கிளைகளை நெருக்குவதால் விரைவில் மற்ற கிளைகளும் முறிந்து விழ வாய்ப்பிருப்பதை இரண்டு ஆண்டுக்கு முன்பே நாங்கள் பதிவு செய்திருந்தோம்.
     கடந்த வாரம் திருவிழாவுக்காக ஊருக்கு சென்ற போது ஏற்கனவே திட்டமிட்டபடி மனைவியுடன் மீண்டும் அந்த கிளைப்பனையை பார்க்க சென்றிருந்தோம். இப்போது அந்த பனையை பார்த்த போதும், அதே அதிர்ச்சி. நாங்கள் கடந்த முறை குறிப்பிட்டது போல் மீண்டும் ஒரு கிளை முறிந்து விழுந்து தற்சமயம் அந்தப்பனை மரத்தில் ஐந்து கிளைகளே உள்ளது.

    எதிர்வரும் காலங்களில் இன்னும் சில கிளைகள் முறிந்துவிழும் ஆபத்துள்ளது. எனவே இனியேனும் கிராம நிர்வாகத்தினர் அந்த அதிசய கிளைப்பனையை பாதுகாக்க வேண்டும்.
    நிறைய மக்கள் அந்த கிளைப்பனையை பெண் தெய்வமாக வணங்குகின்றனர். அவர்களாவது இந்த பனையின் கிளைகள் ஒவ்வொன்றாக முறிந்து விழுவதை தடுக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பனைசதிஷ்
11.08.2022

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்