கூவம் அடையாறு பக்கிங்காம்

       சென்னையின் இன்றைய வரலாறு என்பது அதன் சிறப்புமிக்க நதிகரைகளின் மீது தான் கட்டமைக்கப்பட்டுள்ளது, பரபரப்பான இந்நகருக்கு குறுக்கும், நெடுக்குமாக செல்லும் நீர் வழித்தடங்களை பற்றி கள ஆய்வுகளுடன் எழுதப்பட்டுள்ள அற்புதமான நூல், சமகாலத்தில் நாம் தொலைத்த ( அழித்த ) நீர் ஆதாரங்களின் விளைவு இன்று சென்னை போன்ற பெரு நகரங்கள் பல்வேறு நீரியல் சிக்கலுக்குள் முழ்கி போய்யுள்ளன, சென்னையின் உண்மையான நீர் ஆதாரங்களை தெரிந்து கொள்வது குறைந்தபட்சம் அடுத்து வரும் தலைமுறை இந்நகரில் வாழ்வதை உறுதி செய்யலாம், அதற்கு நாம் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

          சென்னையை போன்ற நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நகரம் உலகில் எங்கும் காண முடியாது, நீங்கள் லண்டன் சென்றால் அங்கு தேம்ஸ் நதி மட்டும் இருக்கும் வாஷிங்டன் போனால் போட்டோமேக் நதி தான் இருக்கும், எந்த நகரை எடுத்து கொண்டாலும் அங்கு ஒரு நதி அதிகபட்சம் இரண்டு நதி தான் உள்ளன, ஆனால் சென்னையில் மட்டும் தான் மூன்று ஆறுகள் ஓடுகின்றன, இவை மூன்றையும் இணைக்கிறது மிக நீண்ட பக்கிங்காம் கால்வாய், இது தவிர சென்னையில் மட்டும் 15 பெரிய கால்வாய் அதுவும் போக சில நூறு மழைநீர் வடிகால் ஓடைகள் என மிகச்சிறந்த சூழலியல் நீர்வழி போக்குவரத்தை கொண்ட நகரம் இன்று அதன் நீர் தேவைகளுக்கே கூட அண்டை மாவட்டங்களிடம் கையேந்தும் 
நிலையிலேயே உள்ளது.

        குறிப்பாக கூவம், கொற்றலை ஆறுகள் பழம் பாலாறுகள் என்று அழைக்கப்படுவதற்கான காரணம், மழை காலங்களில் பாலாற்றில் வெள்ளம் வரும் போது அதன் உபரிநீர் அரக்கோணம் அடுத்த காவிரிப்பாக்கம் ஏரியில் சேகரிக்கப்படுகிறது, அந்த ஏரி நிரம்பியதும் அதன் உபரி நீர் கல்லாறுக்கு திருப்பிவிடப்படுகிறது, கல்லாற்றின் குறுக்கே பேரம்பாக்கம் அருகே கேசவரம் என்ற இடத்தில் அணைக்கட்டப்படுள்ளது, அந்த கேசவரம் அணையில் இருந்து தான் #கூவம் #கொற்றலை என்ற ஆறுகள் உருவாகின்றன.

      தினகரன், தினமலர், தினமணி போன்ற ஊடகங்களில் தமக்குள்ள 20வருட அனுபவத்தின் ஊடாக எழுதிய இந்நூல் சென்னையை ஒரு புதிய கோணத்தில் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறது, நாம் இது வரை பார்த்திராத கேட்டிராத சென்னையின் நீர்வழித்தடங்கள் அதன் பூர்வகுடி மக்கள், சின்ன மீனவ கிராமமான சென்னை இன்று உலகின் மிக முக்கிய நகரமா மாற்றுவதற்கு நாம் கொடுத்த விலை தான் சென்னை நீர் நிலைகளின் அழிவு. #கூவம் #அடையாறு #கொற்றலை #பக்கிங்காம் கால்வாய்களை நாம் நாள்தோறும் கடந்து போய்க்கொண்டு தான் இருக்கின்றோம், ஒரு நிமிடம் அதன் கரைகளில் நின்று அதன் வரலாற்று தொன்மங்களை வாசிப்போம் வாருங்கள்..

       நம்மாழ்வார் நினைவேந்தலை முன்னிட்டு 2018 ஆம் ஆண்டு பனை பாதுகாப்பு மிதிவண்டி பயணத்தில் செங்குட்டுவன் அண்ணாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, விழுப்புரத்தில் உள்ள வரலாற்று தொன்மங்களை ஆய்வு செய்து பாதுகாப்பதில் தொடர்ந்து களப்பணி செய்து வருகிறார், தமிழர் நாகரிங்கத்தின் எச்சங்கள் தமிழகமெங்கும் பரந்துள்ள நிலையில் குறைந்தபட்சம் விழுப்புரத்தில் அரசு அருகாட்சியகம் அமைத்து தமிழர் வரலாற்றை பாதுகாப்பதில் கடுமையான போராட்டங்களை சந்தித்து வருகிறார், அண்ணாவின் கனவு மெய்பட வாழ்த்துகள். 

நூல் ஆசிரியர்: கோ.செங்குட்டுவன்

https://www.amazon.in/dp/9384149802/ref=cm_sw_r_wa_apa_i_yuHxDbJF59GQ9

Comments

  1. சகோ வணக்கம், உங்களது கீச்சு மற்றும் முகநூல் பார்த்தேன். உமது கட்டுரைகளை எமது - விரைவில் களம்காணவிருக்கும் தமிழ்த்தேசியம் சார்ந்த, நாம் தமிழர் கட்சியின் உறுப்பிணர்களைக் கொண்ட ‘கணை இணைய இதழ்’ல் வெளியிட விரும்பினால் என்னை தொடர்புகொள்ளவும்.
    நன்றி
    ஹுசைன்
    பகிரி எண் +65 81187411

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்